குமரன்

ஆஸி.யில் ஊரடங்கை எதிர்த்து மக்கள் போராட்டம்- பெப்பர் ஸ்பிரே தெளித்து விரட்டியடித்த காவல் துறை

ஊரடங்கிற்கு எதிரான போராட்டங்களின்போது பொது மக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆஸ்திரேலியாவில் சிட்னி, கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரங்களில் மட்டும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் மக்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அவ்வகையில், ...

Read More »

ஸ்பெயின் தீவில் எரிமலை வெடித்து சிதறியது

ஸ்பெயினுக்கு சொந்தமான தீவில் எரிமலை வெடித்து சிதறிய நிலையில் அப்பகுதி மக்கள் வெளியேறி இருந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அருகே கேனரி தீவு உள்ளது. இந்த தீவு ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமானது ஆகும். இங்கு 80 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவில் 8 எரிமலைகள் உள்ளன. அவை தற்போதும் அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இந்த எரிமலைகளில் ஒன்று ‘கும்ப்ரே வியாஜே’ 1971-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்து சிதறியது. அதன் பிறகு 50 ஆண்டு காலம் மவுனமாக ...

Read More »

அரசாங்கம், ஐநாவை… கையாளத் தொடங்கி விட்டதா?

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஓர் ...

Read More »

அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய ஈஸ்டர் தாக்குதல்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது!

அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை அடைய 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு குரல் கொடுக்கும் கத்தோலிக்க ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கத்தோலிக்க சமூகத்தினரிடையே அரசாங்கம் பொய்யான கூற்றுகளை பரப்புகிறது எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பான 22 தொகுதிகளில் உள்ள விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். தாக்குதல்களின் ஆதாரங்களைக் கொண்ட 23 ...

Read More »

மதுபான நிலையங்களைத் திறக்கும் தீர்மானத்தை எடுத்த முட்டாள்கள் யார்?

மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்தது விஞ்ஞானபூர்வமான அமைச்சரவையை நியமிப்பது போன்றது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். சிறந்த அறுவடையை எதிர்பார்த்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேகரித்து வந்த ஏரியை ஒரே முறையில் திறந்து விட்டு முழு அறுவடையும் நாசமாகியது போன்ற செயலாக இது அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். யார் இந்த முட்டாள்தனமான தீர்மானத்தை எடுத்தது என்பதை அறிய விரும்புவதாகவும் இது போன்ற செயல்களால் தன்னால் பாராளுமன்ற உறுப்பினராக கிராமத்துக்குச் செல்ல இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் ஊடக சந்திப்பில் ...

Read More »

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈழத் தமிழர்களை இழிவு படுத்தும் படங்களில் நடிக்க மாட்டேன் : லாஸ்லியா

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் லாஸ்லியா. அதன்பின் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 3இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட லாஸ்லியாவிற்கு, தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ஹர்பஜன்சிங், அர்ஜுன் ஆகியோருடன் லாஸ்லியா இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி லாஸ்லியாவிற்கு நடிகர் ஆரியுடன் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம், ‘ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து படமாக்கப்படும் ஃபேமிலி மேன் ...

Read More »

அமைச்சரவையிலிருந்து Christian Porter விலகினார்

ABC ஊடகவியலாளர் Louise Milligan மற்றும் அவர் சார்ந்த ABC நிறுவனத்திற்கு எதிராக மான நட்ட வழக்கு தொடர்வதற்கு நன்கொடையாக பணம் பெற்றதை ஏற்றுக் கொண்ட Christian Porter, அமைச்சரவையிலிருந்து இன்று விலகினார். தொழிற்துறை மற்றும் அறிவியல் துறை அமைச்சராகக் கடமையாற்றிய Christian Porterருக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் பிரதமர் Scott Morrison கூறவில்லை. அதே வேளை, இது குறித்து விரிவாக ஆராயும்படி பிரதமர் பணிமனை தலைவர் Phil Gaetjens அவர்களைக் கேட்டுள்ளார். நிதி வழங்கியவர் யார் என்று Christian Porter அடையாளப் படுத்த ...

Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியானது எப்படி?

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஆனால், மரணம் தொடர்பில் காவல் துறை , தற்கொலை எனும் ...

Read More »

அமெரிக்க எல்லையில் தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகள்

அமெரிக்க அரசின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு அகதிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துளள்து. ஹைத்தி நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில பாலத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மெக்சிகோவுடன் இணைக்கும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டெல் ரியோ சர்வதேச பாலத்தின் அடியில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து அவர்கள் தங்கியிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அவர்கள், அமெரிக்காவுக்குள் செல்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி உள்ளனர். 10 ஆயிரத்தற்கும் ...

Read More »

தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்…

தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி விரைவில் ...

Read More »