இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் லாஸ்லியா. அதன்பின் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 3இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட லாஸ்லியாவிற்கு, தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் ஹர்பஜன்சிங், அர்ஜுன் ஆகியோருடன் லாஸ்லியா இணைந்து நடித்த பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி லாஸ்லியாவிற்கு நடிகர் ஆரியுடன் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் லாஸ்லியாவிடம், ‘ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து படமாக்கப்படும் ஃபேமிலி மேன் போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதற்கு பதிலளித்த லாஸ்லியா ‘இலங்கையில் என்ன நடந்தது என்பது எனக்கும், அங்கு வாழும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து எடுக்கப்படும் எந்த ஒரு திரைப்படத்திலும் நான் நடிக்க மாட்டேன்.
இலங்கையில் நடந்த கொடுமையை நான் நேரில் பார்த்துள்ளேன். இதை நாங்கள் ஒரு திரைப்படமாக தான் எடுக்கிறோம் என்பதை நான் ஏற்க மாட்டேன். இலங்கையில் நான் நேரில் பார்த்த பிரச்சனைகளும், அங்கு நடந்த கொடுமைகளும் என்னால் மறக்கவே முடியாது.
இப்படிப்பட்ட விஷயங்கள் இடம்பெறக்கூடிய ஃபேமிலி மேன் போன்ற கதையில் நான் நடிக்க மாட்டேன்’ என்று திட்டவட்டமாக லாஸ்லியா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் .
Eelamurasu Australia Online News Portal