குமரன்

சம்பளப் பிரச்சினையை தீர்க்க இணக்கம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை மூன்று தவணைகளில் வழங்காமல், ஒரே தடவையில் தீர்ப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள், இன்று (10) தெரிவித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்த முரண்பாடுகளை ஒரே தடவையில் தீர்த்து வைப்போம் என, தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். எங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான 160 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்த அவர், பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ...

Read More »

நம்பிக்கையைத் தகர்க்கும் செயலணி

வகுப்பறையில் மிகவும் குழப்படி செய்து கொண்டிருக்கின்ற மாணவனை, வகுப்புத் தலைவனாக அதாவது ‘மொனிட்டராக’ நியமிப்பது போல, ஒரே நாடு,  ஒரே சட்டம், அமைப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக, வெறுப்புணர்வின் வினையூக்கியான பொதுபல சேனாவின் செயலாளரான ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உவமானத்தை மக்கள் கூறுவதற்கு முன்பாகவே, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரே கூறியிருக்கின்றார் என்பது கவனிப்பிற்குரியது. நமது முன்னோர்கள் இதனை வேறுவிதமாக வர்ணித்துச் சொல்வார்கள். ஒரே நாடு, ஒரே சட்டத்தை நிறுவுதல் என்பது, ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தேர்தல்கால வாக்குறுதியாகும். எனவே, அதனை ...

Read More »

வேதனையில் ஆஸ்திரேலிய குடும்பங்கள்

வரும் பிப்ரவரி 2022 வரை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்குள் வெளிநாட்டிலிருந்து வருபவர்களோ ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களொ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனும் அறிவிப்பு குடும்பங்களை பிரிந்துள்ள ஆஸ்திரேலியர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 90% சதவீதத்தை எட்டிய பின்னர் தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அம்மாநிலத்தின் Premier Mark McGowan தெரிவித்துள்ளார்.

Read More »

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார். அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் ...

Read More »

ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்

கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது. கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இதில் கார்த்தி ஆயுள் தண்டனை கைதியாக நடித்திருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது. தற்போது இந்தியில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கைதி ...

Read More »

அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது சிதைக்கும் செயல்

மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக்கி பொதுத் தேசிய கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது அரசியலமைப்பை சிதைக்கும் செயலாகும் எனவே, கலந்துரையாடல்களின் பின்னர் முடிவு பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கலந்துகொள்வது அவசியம் என்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று எமது நாட்டில் கூட்டணி அரசாங்கம் ஒன்றே உள்ளது. இக்கூட்டணி அரசாங்கத்துக்குள் பல கட்சிகள் ...

Read More »

சஹ்ரான் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியாவை, எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி ...

Read More »

ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மார்ச் 2021 முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என சர்வதேச மாணவர் சேர்ப்பு நிறுவனமான Adventus தெரிவித்துள்ளது.

Read More »

“அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார்”

அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்படமாட்டார் என,  சட்டமா அதிபர், உயர்நீதிமன்றுக்கு  அறிவித்துள்ளார். இது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று(08) இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர், இந்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு ...

Read More »

’இராணுவ ஆட்சி செய்ய என்னால் முடியும்’

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப பிடித்து ...

Read More »