குமரன்

இலங்கை மாணவியின் கல்விக்கு உதவிய அவுஸ்திரேலிய சக மாணவிகள்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை மாணவிக்கு ஏனைய மாணவர்கள் இணைந்து கல்விக்காக நிதிசேர்த்துக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமுதினி சுலோச்சனா என்ற இந்த மாணவி பொருளாதாரத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவருகிறார். இதற்காக அவருக்கு 20ஆயிரம் டொலர்களை தேவை. எனினும் அதனை சுலோச்சனாவினால் வழங்க முடியாமையால் அவரின் வீசாவை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் நண்பி ஒருவர் மேற்கொண்ட பிரசாரத்தின் பேரில் குறித்த மாணவியுடன் பயிலும் மாணவர்கள், இணைந்து 18,500 டொலர்களை சேர்த்தக்கொடுத்துள்ளனர் என்று செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் 20 வருடங்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் கைது

அவுஸ்திரேலியாவில் 20 வருடங்களாக பாலியல் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்த 63 வயது நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் வயதான நபர் ஒருவர் தனது உறவினர் குழந்தைகள் 10 பேரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த அவுஸ்திரேலிய பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது அண்ணன், தம்பியின் மகன் மற்றும் மகள்களை தொடர்ந்து 20 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. ஒரு ...

Read More »

அகதிகளே அடைக்கலம் கொடுத்தனர்

அமெரிக்காவின் பாரிய அளவான புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தார். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு அவர், ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுத்த நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அகதிகளின் பாதுகாப்பில் ...

Read More »

அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம்

அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் நடித்த படங்களில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களே அமைந்தன. காதல் காட்சிகளிலும் டூயட் காட்சிகளிலும் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அருந்ததி படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அனுஷ்காவை மையப்படுத்திய அந்த படம் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது. மந்திரவாதியிடம் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளில் மிரளவைத்தார். அதன்பிறகு முன்னணி டைரக்டர்கள் பார்வை அவர் பக்கம் திரும்பியது. ...

Read More »

ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 ஐ அறிமுகப்படுத்தியது

தடகள் வீரர்கள், நீச்சல் வீரர்கள் என பல்வேறு தரப்பினருக்கான பல்வேறு மாதிரிகளை கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 -வை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனமான ஐ-போன் 7 மாதிரியை இன்று அறிமுகப்படுத்துகிறது. மேலும் ஐ-போன் பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவையும் அறிமுகமாகிறது. இதற்கான நிகழச்சி கலிபோர்னியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஐ-போன் மற்றும் வாட்சை அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 டிம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை பெற்றுள்ள பெண் மருத்துவர் விடுதலையை விரும்பவில்லை

அவுஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கை பெண் மருத்துவர் ஒருவர் குறுகிய கால விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர், நன்னடத்தையின் அடிப்படையில் குறுகியகால விடுமுறையில் வீடு செல்ல வாய்ப்பு இருக்கின்ற போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார். குறுகிய கால விடுப்பில் தாம் சிறையில் இருந்து வெளியேறினால், நாடு கடத்தும் வகையில் குடிவரவு முகாமில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாகவே அவர், இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார். கணவரின் ...

Read More »

6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங்

6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங் நிறுவனம். இது மிகப்பெரிய இழப்பீடு என்று கருதப்படுகிறது. 6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகிறது சாம்சங் நிறுவனம். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ-போனுக்கு இணையாக குறைந்த விலைவில் வெளியிட்டு சாம்சங் நிறுவனம் அசத்தி வருகிறது. இதனால் உலகளவில் சாம்சங் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை லட்சக்கணக்கான ...

Read More »

பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். ...

Read More »

இயக்குநராகும் நடிகர் தனுஷ்

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ், இயக்குநர் ஆகிறார். முதன்முதலாக அவர் ஒரு படத்தை டைரக்டு செய்கிறார்.நடிகர் தனுஷ், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் ஆவார். இவருடைய அண்ணன், டைரக்டர் செல்வராகவன். கஸ்தூரிராஜா டைரக்டு செய்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார். காதல் கொண்டேன், திருடா திருடி, தங்க மகன், படிக்காதவன், யாரடி நீ மோகினி, மாரி, மாப்பிள்ளை, ஆடுகளம், வேங்கை, மரியான், நையாண்டி, வேலையில்லாத பட்டதாரி உள்பட இதுவரை 29 படங்களில் ...

Read More »

சிட்னியில் இறந்த பெற்றோருக்கு அருகில் உறங்கிய 3 வயது சிறுமி

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில்,உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும் தேவ் பிள்ளை என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், டஸ்மின் பஹார் தனது 3 வயது மகளுடன் சமீபத்தில் தனியாகச் சென்று வேறு வீட்டில் குடியேறினார். குடும்ப வன்முறையே தனது பிரிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினத்தை ...

Read More »