குமரன்

இந்தோனேசியாவில் மலர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய மலர்!

உலகின் மிகப்பெரிய மலரான ராஃப்லீசியா இந்தோனேஷியாவின் மேற்கு சுமத்ரான் காட்டில் மலர்ந்துள்ளது.   117 சென்றி மிற்றர் விட்டம் கொண்ட இந்த மலர் இதுவரை மலர்ந்த ராஃப்லீசியா மலர்களிலேயே மிகப்பெரிய மலர் என மேற்கு சுமத்ராவில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. 2017 ஆம்  ஆண்டில் இதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ரஃப்லீசியா மலர் 107 சென்றி மிற்றர் விட்டம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மலரின்  ஒட்டுண்ணி பண்பு, விகாரமான தோற்றம் மற்றும் துர்நாற்றத்தின் காரணமாக “அசுரன் மலர்” , “சடலம் ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

ஆஸ்திரேலிய காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர  காட்டுத்தீ வேகமாக  பரவி வருகிறது. இதனால் எழுந்துள்ள புகையால்  ஆஸ்திரேலிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.  . காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கங்காரு தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர்பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து தீவிபத்தால் பலி எண்ணிக்கை 23யை ...

Read More »

இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள பூஜித்த, ஹேமசிறி!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல் துறை  மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.   கடந்த நீதிமன்ற விசாரணையின்போது கொழும்பு மேலதிக நீதிவான் இவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 21/4 உயிர்த்த ஞாயிறு  தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்காமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழே இவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

Read More »

வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயாராகும் ராதிகா!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயாராகி வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து ...

Read More »

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி!

ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை விட அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாறும்போது சர்ச்சையாகின்றன. மன்மோகன் சிங், மோடி ஆகியோரின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டன. தமிழில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாக்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. ...

Read More »

லிபியாவில் இராணுவ பாடசாலை மீது தாக்குதல் : 28 பேர் உயிரிழப்பு!

லிபிய நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில்  உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு ஆயதக் குழுக்குள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி கொல்லப்பட்டதன் பின் உள்ளநாட்டு போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக பல்வேறு தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். இதில் அதிகளவிலான ...

Read More »

ஏனைய பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றதே தவிரவும் தற்போது வரையில் இறுதிமுடிவொன்றை எட்டவில்லை என்று அதன் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் அதுகுறித்த அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது குறித்து கடந்த காலங்களிலேயே ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு!

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்தார்.   அஸ்திரேலியாவின் தெற்கு , நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளில் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் தீ பரவி வருகின்ற நிலையில் அப் பகுதிகளில் வசிக்கின்ற சுமார் 1 லட்சம் பேர் வரை வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தோடு குறித்த காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலேயே தீயை கட்டுக்குள் ...

Read More »

கோத்தாபயவின் ஆட்சி எமக்கு பெரும் நெருக்கடி!

அரச தலைவர் வெளியிட்டுள்ள தனது கொள்கை அறிக்கையில் பெரும்பான்மைத்துவ ஆட்சி என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது இன்னுமெரு பெரும் நெருக்கடியினை எமக்குத் தந்திருக்கின்றது. இதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில், 04.01நேற்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது அரசதலைவராகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பவர், இந்த நீண்ட நெடிய வரலாற்றினை அவர் அறிந்திருப்பதாக எமக்குத் ...

Read More »

2019 – சர்வதேச போக்குகள்!

2019ஆம் ஆண்டின் இறுதி நாளான மார்­கழி 31ஆம் திகதி ஈராக்­கிய தலை­நகர் பக்­தாத்தில் அமைந்­துள்ள உல­கி­லேயே மிகப்பெரிய அமெரிக்க தூத­ரா­லயம் ஈராக்­கிய மக்­களின் பலத்த தாக்­கு­த­லுக்­குள்­ளா­னது. 2003இல் அமெரிக்கா ஈராக்­கினுள் புகுந்து 16 ஆண்­டுகள் கழிந்த நிலை­யிலும் அமெரிக்­காவின் ஈராக்­கிய கொள்­கைக்கு பலத்த எதிர்ப்பு ஈராக்கில் இன்னும் இருப்­பதை தாக்­குதல் சம்­பவம் எடுத்துக் காட்­டு­கி­றது. ஈராக்­கிய அர­சாங்கம் இரண்டு நாடு­களில் தங்­கி­யுள்­ளது. வேடிக்கை என்­ன­வென்றால் அமெரிக்கா பரம வைரி­யாக கருதும் ஈரான் ஈராக்­கினுள் செல்­வாக்­குடன் திக­ழு­கி­றது. ஒரு­புறம் ஈராக்கை பணிய வைப்­ப­தற்கு அமெரிக்­காவின் பொரு­ளா­தார ...

Read More »