குமரன்

பிரியா – நடேஸ் குடும்பத்தை நியூசிலாந்து / அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குடும்பத்தை எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் ஆராயப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார். Nine Radio-வுக்கு வழங்கிய நேர்காணலில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பு ...

Read More »

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது. சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ ...

Read More »

தொடர்ந்து தொகுப்பாளராக முடிவெடுத்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கும் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன் பின்னர் பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அப்பாவை போன்றே மகளும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் கால்பதித்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளராக ...

Read More »

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்..!

பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த சமயத்தில்  தவறவிட்ட பந்து உதட்டை கிழித்துவிட்டதால் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை போல, பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) டி 20 லீக் போட்டிகள், நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம், பாகிஸ்தானில் ஆரம்பமான 6 ஆவது பிஎஸ்எல் சீசன், கொரோனா தொற்றின் காரணமாக, பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகின்றது. இதில், பிஎஸ்எல் அணிகளில் ஒன்றான ...

Read More »

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சோதனை- பைசர் நிறுவனம் தொடங்கியது

பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் ஆகியவை இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. அதேபோல் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்துள்ளன. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே 12 முதல் 15 ...

Read More »

வெப் தொடருக்காக சினிமாவை விட அதிக சம்பளம் வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா, வெப் தொடருக்காக சினிமாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ள தகவல் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. நடிகை சமந்தா, அதிகபட்சமாக ஒரு படத்துக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக அவர் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் ...

Read More »

அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி

ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமை பலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக ...

Read More »

முடக்கமும் இல்லாத, ஊரடங்கும் இல்லாத விசித்திரமான பயணத்தடை

கோவிட் தொற்றுக்காக நாட்டில் பயணத்தடை விதிக்கப்படுவதாக புதிய சொல்லொன்று பாவிக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். இது முடக்கமும் அல்ல, இதுவொரு ஊரடங்கு சட்டமும் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே இப்போது இருக்கின்ற அபாயகரமான சூழலை புறந்தள்ளி விட்டு புதிய விடயங்கள் பேசப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இன்று நிதி முகாமைத்துவம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான கட்டளைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் கூட இந்த ...

Read More »

முதல் காய்ச்சல் முதல் விமானம் வரை- உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளிற்காக ஒரு தாயின் இரண்டு வார போராட்டம்

அவர்களது குடும்பம் குயின்ஸ்லாந்தின் மத்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட பின்னர்( அவரது கணவரின் விசா முடிவடைந்த பின்னர்) பிரியா நடேசலிங்கம் தனது இரு புதல்விகளினதும்-தர்னிகா 3- கோபிகா 5 உரிமைகளிற்காக தீவிரமாக குரல்கொடுப்பவராக மாறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள தனது பிள்ளைகளி;ற்காக போராடுவதை தவிர பிரியா நடேசலிங்கத்திற்கு வேறு வழியில்லை என்கின்றார் அவர்களது குடும்ப நண்பர் சிமோன் கமரூன். எல்லைகாவல்படையினர் அவர்களை கிறிஸ்மஸ் தடுப்பு முகாமிற்கு கொண்;டு சென்றது முதல் அவர்களின் புதல்விகளின் உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவிற்கு மோசமடைந்துள்ளது. தடுப்பிலிருந்து ஒரு நாளைக்கு ...

Read More »

ஜனாதிபதி செயலக இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் என்ற செய்தியை வெளியிட்டவர் கைது

ஜனாதிபதி செயலக இணையத்தளம் உட்பட பல முக்கிய இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளன என போலிச்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை தகவல்தொழில்நுட்ப சமூகத்தின் தலைவர் ரஜீவ் மத்யு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்தவாரம் ஜனாதிபதி செயலகம் வெளிவிவகார அமைச்சு உட்பட பல இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளன என தகவலை பகிர்ந்துகொண்டார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களிற்காக 23 வயது ரஜீவ் மத்யு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More »