முதல் காய்ச்சல் முதல் விமானம் வரை- உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளிற்காக ஒரு தாயின் இரண்டு வார போராட்டம்

அவர்களது குடும்பம் குயின்ஸ்லாந்தின் மத்தியிலிருந்து கொண்டு செல்லப்பட்டு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட பின்னர்( அவரது கணவரின் விசா முடிவடைந்த பின்னர்) பிரியா நடேசலிங்கம் தனது இரு புதல்விகளினதும்-தர்னிகா 3- கோபிகா 5 உரிமைகளிற்காக தீவிரமாக குரல்கொடுப்பவராக மாறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள தனது பிள்ளைகளி;ற்காக போராடுவதை தவிர பிரியா நடேசலிங்கத்திற்கு வேறு வழியில்லை என்கின்றார் அவர்களது குடும்ப நண்பர் சிமோன் கமரூன்.

எல்லைகாவல்படையினர் அவர்களை கிறிஸ்மஸ் தடுப்பு முகாமிற்கு கொண்;டு சென்றது முதல் அவர்களின் புதல்விகளின் உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவிற்கு மோசமடைந்துள்ளது.

தடுப்பிலிருந்து ஒரு நாளைக்கு அரைமணித்தியாலம் மாத்திரம் வெளியில் அனுமதிக்கப்படுவதால் தருணிகா கோபிகாவின் உடலில் விட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுள்ளது,அவர்கள் தொடர்ச்சியாக தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டுவந்துள்ளனர்.

தரணிகாவின் இரு பற்கள் பழுதடைந்ததால் அவற்றை நீக்குவதற்கு அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது.
திங்கட்கிழமை தருணிகா வாந்தி,காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவிலிருந்து பேர்த்சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனது மகள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்களிற்கு தாய் அறிவித்து இரண்டு வாரங்களின் பின்னர் அவர் மெல்பேர்ன் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தருணிகா நிமோனியா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தனது மகளின் உடல்நிலையில் ஏதோ பிரச்சினை உள்ளது அன்டிபயோட்டிக்சினை வழங்குமாறு தாய் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தபோதிலும் கிறிஸ்மஸ்தீவின் மருத்துவர்களும் தாதிமார்களும் பனடோ மற்றும் நியுரோபன்னை மாத்திரம் வழங்கிவந்துள்ளனர்.

ஐ_ன் முதலாம் திகதி மருத்துவர் ஒருவர் தருணிகா நல்லநிலையில் காணப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.
ஆனால்ஒரு வாரத்தின் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரியா தனது பிள்ளைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளார் என கமரூன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையின் உடல்நிலை குறித்து நாங்கள் அறிந்த விடயங்கள் கடும் சீற்றத்தை ஏற்படுத்துகின்றன,என தெரிவித்துள்ள கமரூன் தங்கள் பிள்ளைக்கு தேவையாக உள்ள சிறிய உதவியை பெறுவதற்கு கடந்த வாரம் முழுவதும் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கவேண்டும்,அந்த உதவி வெளிப்படையாக மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான நண்பர்கள் வெளியிட்டுள்ள விபரங்களில் சிறுமிக்கு எப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது – என்ன நடந்தது என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் இந்த தகவலை அவர்கள் பெற்றுள்ளனர். தர்ணிகா மே 24 ம் திகதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் அவர் அன்று பாடசாலைக்கு செல்லவில்லை.

பிரியா தனது மகளை சர்வதேச சுகாதார மருத்துவசேவைக்கு ஐஎச்எம் எஸ் அழைத்துச்சென்றுள்ளார்.அவ்வேளை மகள் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவர்கள் பனடோலும் நியுரோபனும் வழங்கியுள்ளனர்.

இது 27 ம் திகதி வரை தொடர்ந்துள்ளது. தர்ணிகாவில் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாத நிலை நீடித்துள்ளது.

நடேசலிங்கம் வற்புறுத்தியதை தொடர்ந்து 30 ம் திகதி ஐஎச்எம்எஸ் மருத்துவர் ஒருவர் பரிசோதித்துள்ளார். அவர் சிறுநீரக தொற்று என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பெற்றோர் சிறுமிக்கு காதுவலி மற்றும் மூக்கிலிருந்து சளி வெளிவருவது போன்றவை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் மீண்டும் பனடோலையும் நியுரோபனையும் வழங்கியதுடன் ஐந்து நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

அடுத்த நாள் தனது மகளை மருத்துவர்கள் மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என நடேசலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பனடோல் நியுரோபனால் பலன் இல்லை அதனால் அன்டிபாட்டிக்கினை வழங்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
ஆனால் மருத்துவர் சிறுமியின் வயிற்றில் பூச்சியிருக்கலாம் அன்டிபாட்டிக் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
ஜூன் முதலாம் திகதி நடேசலிங்கம் தான் ஐஎச்எம்எஸ் மருத்துவரிடம் மீண்டும் சென்றதாகவும் இம்முறை சீறுநீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டதாகவும் மகள் நன்றாகயிருக்கின்றார் என மருத்துவர் தெரிவித்தபோதிலும் குடிப்பதற்கு நிறைய நீரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவித்துள்ளார்.

பனடோலையும் நியுரோபனையும் வழங்கியுள்ளனர்.

இரண்டு நாட்களில் தருணிகாவை மருத்துவர்கள் பார்வையிடவேண்டும் உடல்நிலையில் முன்னேற்றம் அடையாவிட்டால் அன்டிபாட்டிக்சினை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டு நாட்களின் பின்னர் மருத்துவர் மீண்டும் தருணிகா ஆரோக்கியமாக உள்ளார் என தெரிவித்துள்ளார். எனினும் அன்டிபயோட்டிக்சினை வழங்கவேண்டும் என விடுக்கப்பட்ட வேண்டுகோளை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

நான்காம் திகதியளவில் தருணிகாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது அவர் வாந்தியெடுத்துள்ளார், குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் ஐஎச்எம்எஸ் பணியாளர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் என்பதால் நடேசலிங்கம் குடும்பத்தினர் ஐஎச்எம்எஸ் தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டுள்ளனர்,

மருத்துவர்களுடன் பேசுவதற்கு ஒரு மணித்தியாலம் வரை காத்திருந்த அவர்களிடம் பனடோலை பயன்படுத்துமாறு அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையவில் தருணிகாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது.நியுரோபன் பயன்படுத்தியதை தொடர்ந்து அவர் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் நல்லநிலையில் இருக்கின்றார் என மருத்துவர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர்.

மகள் வாந்தியெடுக்கின்றார் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளார் ஆனால் அவர் நல்லநிலையில் காணப்படுகின்றார் என எப்படி தெரிவிக்கின்றீர்கள் என நடேசலிங்கம் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்று மதியம் தருணிகா கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவில் காய்ச்சல் மீண்டும் அதிகரித்துள்ளது வாந்தியும் காணப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சிறுமியை பார்வையிட்ட மருத்துவர் வாந்தியை கட்டுப்படுத்துவதற்கான மருந்தையும் நியுரோபனையும் வழங்கியுள்ளார்.
எனினும் ஐந்து மணியளவில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது காய்ச்சல் ஆபத்தான அளவிற்கு அதிகரித்துள்ளது.

தயவு செய்து மகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என பிரியா மன்றாடியுள்ளார்,இதன் பின்னரே இறுதியாக தருணிகாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்,மறுநாள் தாயுடன் அவரை பேர்த் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கார்டியன்