ஜனாதிபதி செயலக இணையத்தளம் உட்பட பல முக்கிய இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளன என போலிச்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கை தகவல்தொழில்நுட்ப சமூகத்தின் தலைவர் ரஜீவ் மத்யு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்தவாரம் ஜனாதிபதி செயலகம் வெளிவிவகார அமைச்சு உட்பட பல இணையத்தளங்கள் சைபர் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளன என தகவலை பகிர்ந்துகொண்டார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களிற்காக 23 வயது ரஜீவ் மத்யு கைதுசெய்யப்பட்டுள்ளார்.