2014ம் ஆண்டு ஐ.எஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். மேற்கு ஈராக்கின் சின்ஜர் மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை அவுஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். ஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் வந்த பிறகு, நாங்கள் மலைக்கு சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை ...
Read More »குமரன்
போருக்குப்பின் ஆட்சி நடத்திய அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
வடக்கில் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடுகின்றனர். அதேபோல தென்னிலங்கையில் போரை முன்னின்று போராடி அங்கவீனமான இராணுவத்தினர் ஓய்வூதியம் வழங்கவில்லை என போராடுகின்றனர். அப்படியானால் இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்த பின்னர் ஆட்சி நடத்திய அனைவரும் வெட்க்கித் தலை குனிய வேண்டும். அவர்களால் நாட்டு மக்கள் நிம்மதியயாக வாழ முடியாது என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பி கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டினை ஆண்டு ...
Read More »பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி!
முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்துவருகின்றது. இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு காவல் துறை நிலையத்தில் நேற்று நள்ளிரவு முறைப்பாடு செய்துள்ளனர். தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Read More »13 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் அதிதிராவ்!
தமிழில் காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்த அதிதிராவ் 13 ஆண்டுகளுக்கு பின் மலையாள படத்தில் நடிக்க உள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘ப்ரஜாபதி’. மம்மூட்டி ஹீரோவாக நடித்த இந்த படத்தில், ஹீரோயினாக அதிதி ராவ் அறிமுகமானார். 2006-ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீசானது. அதன்பிறகு, ‘காற்று வெளியிடை’, ‘பத்மாவத்’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘சம்மோஹனம்’ என ஏராளமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார். இந்த நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மறுபடியும் மலையாள படம் ஒன்றில் ...
Read More »கூட்டமைப்பு புதிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எவ்வித முடிவை எடுக்க வேண்டுமென்று வட, கிழக்கு தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அந்த எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் பாணியில் நடந்துகொள்ள இரா.சம்பந்தன் முற்படுகிறார் என்பது அண்மைய சந்திப்புகளில் அவர் தெரிவித்த கருத்துக்களிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. கடந்த காலத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலாக இருக்கலாம் அல்லது பொதுத் தேர்தலாக இருக்கலாம், மாற்று தேர்தல்களாக இருக்கலாம், தீர்க்க தரிசனமாக, நடந்து கொள்ளாமையின் காரணமாகவே பல இழப்புகளையும் தோல்விகளையும் எல்லாவற்றுக்கு மேலாக ஏமாற்றங்களையும் தமிழ் மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ...
Read More »ஆய்வுலகின் பார்வையில் பெரியார்!
தமிழகத்தில் பெரியாரைக் கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள், வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு தரப்புகளிலுமே அவர் தவிர்க்கவியலாத ஆளுமையாகவே இருக்கிறார். தமிழகத்துக்கு வெளியே குறிப்பாக ஆய்வுப் புலத்தில் பெரியாரை எப்படிப் பார்க்கிறார்கள்? வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா, நவீன இந்தியாவை வடிவமைத்த 21 சிற்பிகளில் ஒருவராக பெரியாரைக் கருதுகிறார். தனது ‘மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா’ நூலில் காந்தி, தாகூர், அம்பேத்கர் வரிசையில் பெரியாரையும் சேர்க்கிறார். ‘புரட்சிகர சீர்திருத்தவாதி’ என்பது பெரியாரைப் பற்றிய அவரது கட்டுரையின் தலைப்பு. குஹாவின் நூலில் பெரியாரின் வாழ்க்கைச் சுருக்கத்தோடு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தும் ...
Read More »ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!
ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு சுயேச்சை வேட்பாளர் மற்றும் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் நேற்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரரும் அபே ஜனபல சார்பில் சமன் பெரேராவும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி ...
Read More »செல்லுபடியற்றது என அறிவித்த தேசியஅடையாள அட்டையை பயன்படுத்தினாரா கோத்தா?
இலங்கையின் ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்;பாளர் கோத்தபாய ராஜபக்ச 2017 ,2018 மற்றும் 2019 இல் வாக்காளர் பதிவில் தனது பெயரை பதிவு செய்தார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டை தேர்தல் தொகுதியில் உள்ள கங்கொடவில தெற்கு 526 ஏ கிராமசேவையாளர் பிரிவில் கோத்தபாய ராஜபக்ச தன்னை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள ஆங்கில நாளிதழ் வாக்காளர் பதிவினை ஆராய்ந்தவேளை இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையி;ன் ஆட்பதிவு திணைக்களம் ...
Read More »மாற்றம் வந்து கொண்டிருக்கிறது!
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்று பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் கிரெட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் என்ற சிறுமி பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கிரெட்டா துன்பர்க் தலைமையில் உலகின் பல நாடுகளிலிருந்து பள்ளி மாணவர்களும், பணிக்குச் செல்பவர்களும் பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதை உலகத் தலைவர்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். சுமார் ...
Read More »பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!
ஆந்திர மாநில சிறுமியை பணியில் அமர்த்தி சித்ரவதை செய்ததாக நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில சிறுமி ஒருவர் தி.நகர் பகுதியில் உள்ள நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்த போது சித்ரவதை செய்யப்பட்டதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே சிறுமி மீது பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் பாண்டிபஜார் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பானுப்ரியாவின் வீட்டில் இருந்து 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் ...
Read More »