குமரன்

கொரோனாவை ஓழிக்க ஏற்கனவே இருக்கும் சில மருந்துகள் பயன்படலாம்!

ஏற்கனவே இருக்கும் சில மருந்துகளே கொரோனாவை ஓழிக்க பயன்படலாம் என்கிறார்கள் அவுஸ்திரேலிய மருத்துவர்கள். சீனாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பிய சீனர்கள் சிலர், சீனாவில் சில மருந்துகள் கொரோனாவுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு பலனளிப்பதாக தகவல் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறிய செய்தியின் அடிப்படையில், அவுஸ்திரேலியாவில் வாழும் சீன நோயாளிகள் சிலருக்கு அந்த மருந்து கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கப்பட்ட அந்த நோயாளிகள் அனைவரும் நல்ல முன்னேற்றம் காட்டியிருகிறார்கள். அந்த மருந்து, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து! ஆக, ஹெச்.ஐ.விக்கான சிகிச்சை மற்றும் மலேரியாவுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என ...

Read More »

யாழ்.மாநகர முதல்வர் ஆனல்ட் பொதுத் தேர்தலில் வேட்பாளராக இணைப்பு

யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது. தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், ...

Read More »

‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’

தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, ...

Read More »

அறிகுறியே இல்லாமல் அவெஞ்சர்ஸ் நடிகரை தாக்கிய கொரோனா

அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஐடிரிஸ் எல்பா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஐடிரிஸ் எல்பா. 47 வயதாகும் ஐடிரிஸ், கடந்த வாரம் தனது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார். அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஐடிரிஸ் முன்னெச்சரிக்கையாக தனக்கும் சோதனை செய்துள்ளார். தற்போது அவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை எந்தவித அறிகுறியும் இல்லை; தான் எப்போதும் போல நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ...

Read More »

கொரோனாவுக்கு தீர்வு அமெரிக்க பரிசோதனை தடுப்பூசி?

முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது, மிகப் பெருமளவில் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது. வொஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஓர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி இணையத்தளம் தகவல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பரிசோதனைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணியான ...

Read More »

170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர்!

இத்தாலி தென்கொரியாவிலிருந்து சிறிலங்கா  வந்த 170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஈரான் தென்கொரியா ஆகியநாடுகளில் இருந்து மார்ச் முதலாம் திகதி முதல் 16 ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் சிறிலங்கா  வந்த அனைவரையும் அருகில் உள்ள காவல் துறை நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோன வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். இத்தாலி கொரியாவிலிருந்து நாடு ...

Read More »

கவினுடன் இணைந்த பிகில் பட நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கவின் நடிக்கும் புதிய படத்தில் பிகில் பட நடிகை ஜோடியாக நடித்துள்ளார். பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவின், தற்போது ‘லிப்ட்’ புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஈகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி இப்படத்தை தயாரிக்கிறார். விளம்பரப் படங்கள் மூலம் பெரிதும் கவனம் பெற்ற வினித் வரபிரசாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர்கள் இணையும் ...

Read More »

‘கொரோனா’ சந்தேகம்: யாழில் பலர் விடுவிப்பு!

கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், பரிசோதனைகளின் பின்னர், இன்று (16) விடுவிக்கப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டதையடுத்தே, விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஏனைய வைத்திசாலைகளிலும் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கை ரீதியில் 12 மத்திய நிலையங்கள்!

இலங்கை வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம்கூறியுள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Read More »

உலகை உலுக்கிய குழந்தை மரணம் – 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்த விபத்தில் உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தி மரணம் தொடர்பாக 3 பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர். பல நேரங்களில் இந்த ஆபத்தான பயணங்கள் விபத்தில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு ...

Read More »