முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது, மிகப் பெருமளவில் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது.
வொஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஓர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி இணையத்தளம் தகவல் வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பரிசோதனைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணியான ஜெனிஃபர், “இந்த பரிசோதனைக்குள்ளாவது என் பேறு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal