இலங்கை வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம்கூறியுள்ளது.
குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal