2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் அணி முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும் ; இருந்த அரசியல் உறவில் ஏற்பட்ட வெடிப்புக்களும் ; பகிரங்கமானவை. சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ;வீழ்வேன் என்று நினைத்தாயோ ; என்று பதிலுரைத்து அவர் வீறு கொண்டு எழுவதற்கு, ...
Read More »குமரன்
மெல்போர்னில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கும் சமையல் கலைஞர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து வருவது, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்றோருக்கு தமான் ஸ்ரீவஸ்தவ் என்ற 54 வயது நபர் செய்துவரும் உதவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான இவர், ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வினியோகித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குவது இது புதிதல்ல. ஈராக்கில் வளைகுடா ...
Read More »அமெரிக்கத் தேர்தலும் பட்டினத்துப் பிள்ளையின் தத்துவமும்
அமெரிக்க சனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3ல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளில் திட்டவட்டமான நிலை ஏற்படுவதில், வழமைக்கு மாறாகத் தாமதம் ஏற்பட்டிருந்தது. அமெரிக்காவின் அடுத்த சனதிபதியாக, ஜோ பைடன் தெரிவு செய்யப்படுவதற்கான திட்டவட்டமான சமிக்ஞைகள், நவம்பர் 7ல் வெளியாகின. ஒரு வேட்பாளர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு 270 எலக்டோரல் கொலேஜ் (தெரிவாளர் குழு) வாக்குகளைப் பெறவேண்டும். ஜோ பைடனுக்கு 290 வாக்குகள் கிடைத்துள்ளதாகக் கணிக்கப்படுகின்றது. தேர்தல் நடைபெற்றதிலிருந்து சுமார் நான்கு வாரங்களின் பின்னரே உத்தியோகபூர்வமான சனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்றது. காரணம்: தபால் வாக்கு ...
Read More »கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுங்கள்!
கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய விடயங் களுக்காகக் கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்களைத் தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகவும் ஆபத்தான ...
Read More »கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியது
இலங்கையில மேலும் 510 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்றைய தினம் மேலும் 510 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரம் 929ஆக உயர்ந்துள்ளது. இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 10 ...
Read More »ஜெருசலேமுக்கு வாங்க வேலை தருகிறோம்- டிரம்புக்கு அழைப்பு
டிரம்ப் அவர்களே நீங்கள் அதிபர் பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் ஜெருசலேமுக்கு வாருங்கள் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை தருகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அதிபர் தேர்தலில் தோல்வியுற்றுள்ள டொனால்டு டிரம்பை கிண்டல் அடிக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகர சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், டொனால் டிரம்ப் அவர்களே நீங்கள் அதிபர் பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்படவேண்டாம். நீங்கள் இங்கு வாருங்கள் எங்கள் நகர சபையில் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை ...
Read More »மாநாட்டிற்கு தயாரான சிம்பு…
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்து தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி இருக்கிறார் சிம்பு. சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்தனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்து. இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்திலும், பொங்கல் ...
Read More »ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும்
ஆஸ்திரேலிய வாழ்க்கையை அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் புரிந்து கொள்ளும் விதமாக, ஆஸ்திரேலியவிழுமியங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட குடிவரவுத் தொடர்பான இந்த அறிவிப்பில், ஆஸ்திரேலிய விழுமியங்களையும அடிப்படைகோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு அனைத்துவிதமான விசா விண்ணப்பத்தாரர்களும் கையெழுத்திட வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த விழுமயங்களில் சுதந்திரம், மரியாதை, சமத்துவம், சட்டத்திற்கு கட்டுப்படுதல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ஆஸ்திரேலிய அரசு குறிப்பிடும் விழுமியங்கள்: * தனி மனித சுதந்திரம் * மத சுதந்திரம் (எந்த மதத்தையும் பின்பற்றாமல் ...
Read More »ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது!-ஜோ பைடன் வெற்றி உரை
ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார் ஜோ பைடன். அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது. என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். ...
Read More »டெங்கும், கொரோனாவும் வந்த நோயாளி முதன்முறையாக இனங்காணப்பட்டார்
நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றும், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. 29 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்குக், டெங்குக் காய்ச்சலும் இருப்பது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Read More »