இலங்கையில மேலும் 510 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணி யில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது.
நேற்றைய தினம் மேலும் 510 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரம் 929ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 5 ஆயிரத்து 609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 562 பேர் நேற்றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal