நடிகர் விஷாலுக்கு வில்லனாக பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தான் இயக்கும் படங்களில் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இயக்குனர் மிஷ்கின் வழக்கம். ஏற்கனவே தான் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தில் பிரசன்னாவை வில்லனாக்கி அழகு பார்த்தார். அந்த வரிசையில் விஷாலை வைத்து தான் இயக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜை வில்லனாக்கியிருக்கிறார். கதாநாயகனாக நடித்து வந்த இயக்குனர் கே.பாக்யராஜ் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க பாக்யராஜ் ஒப்புக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜ் வில்லனாக ...
Read More »குமரன்
ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்கப் நீட்டிக்க சில டிப்ஸ்
ஸ்மார்ட்போன் பயனர்களின் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருப்பது, அதன் பேட்டரி பேக்கப் எனலாம். ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய பலரிடம் எந்நேரமும் பவர் பேங்க் காணப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. துவக்கம் முதலே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை சரி செய்வதை விட அதிகளவு பேட்டரியை தான் வழங்கி வருகின்றன. சில ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் ...
Read More »போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன்
உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன், வெளியான முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்தது. அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது. இந்நிலையில் வெளியான முதல் நாளில் மட்டும் சூப்பர் மேரியோ ரன் கேமினை சுமார் 2,850,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். முன்னதாக போக்கிமான் கோ, வெளியான ...
Read More »ஒஸ்ரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த நத்தார் வேண்டுதல் – 2016
இலங்கையின் வடகிழக்கில் உள்நாட்டில் குடிபெயர்ந்தோர், மீளக்குடியமர்த்தப்பட்டோர் ஆகிய பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவில் மீட்டுவதற்கும், அவர்களுக்கு உதவுவதற்கும் பிரதி ஆண்டுகள் தோறும் கிறிஸ்மஸ் நன்னாளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒஸ்ரேலியா அடையாளப்படுத்துகிறது. அதன் வகையில் இவ்வாண்டு (2016) நத்தார் தினத்தை முன்னிட்டு அதன் நிதிசேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றது. அதன் செயற்பாடுகள் தொர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு: tro-aust-christmas-appeal-letter_2016 tro-aust-radio-thon-media-announcement-2016 tro-xmas_radiothon_pledge-form_2016 tro-aust-christmas-appeal-letter_2016
Read More »அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்
பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்-இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. சர்பிராஸ் அகமது (31ரன்) களத்தில் இருந்தார். இன்று 3-ம் நாள் ஆட்டம் ...
Read More »முன்னாள் போராளிகள் மூவர் விடுதலை!
பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்த முன்னாள் போராளிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இம்மூவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் 200 பேருக்கு நேற்றைய தினம் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர் நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியாலயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ...
Read More »மோசடி வழக்கில் மலையாள நடிகை, கணவர் கைது
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஷ் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ். தலப்பாவு, கேரளா கபே, நாயகன், ரெட் சில்லீஸ், பிரணாயம் உள்ளிட்ட பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள அவர், திருடி, வீரமும் ஈரமும் ஆகிய தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இது தவிர விளம்பர படங்களிலும் நடித்து உள்ளார். இவர் கடந்த 2012–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து ...
Read More »ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிய கேமரா வசதி
குறுந்தகவல்கள் அனுப்புவதை எளிமையாக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசேஞ்சர் செயலியில் புதிய அம்சத்தை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் செயலியில் உரையாடும் வழிமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் எளிமையாகவும், அதிக அம்சங்களும் நிறைந்த கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் விரைவில் உலகளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் தினசரி அடிப்படையில் சுமார் 250 கோடி எமோஜிக்கள், புகைப்படம், ஸ்டிக்கர் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்கள் எழுத்துக்களை விட காணொளிகளையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொண்டோம்’, என ...
Read More »கே.பியை கைது செய்ய உத்தரவில்லை – கொழும்பு நீதிமன்றம்
விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மழல்கொட இதனை தெரிவித்தார். ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு நபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியுமென்று கூறிய நீதிபதி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் ...
Read More »அவுஸ்ரேலியா சிறப்பான தொடக்கம் ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்
அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பகல்–இரவு போட்டியான இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அவுஸ்ரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்துள்ளது. தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்த அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் 110 ரன்களுடனும் (192 பந்து, 16 பவுண்டரி), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ...
Read More »