அவுஸ்ரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. பகல்–இரவு போட்டியான இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அவுஸ்ரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்துள்ளது.
தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்த அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவன் சுமித் 110 ரன்களுடனும் (192 பந்து, 16 பவுண்டரி), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 64 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக சுமித்தின் முதல் செஞ்சுரி இதுவாகும். முன்னதாக டேவிட் வார்னர் 32 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 4 ரன்னிலும், மேட் ரென்ஷா 71 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 2–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
அவுஸ்ரேலிய -பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேன் மைதானத்தின் ஒரு பகுதியில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. அந்த குளத்தில் உற்சாக குளியல் போட்டபடி ஆட்டத்தை கண்டு களிக்கும் ரசிகர்கள்.
Eelamurasu Australia Online News Portal