பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவுசெய்த முன்னாள் போராளிகள் மூவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இம்மூவரும் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் 200 பேருக்கு நேற்றைய தினம் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மற்றும் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர் நிர்மானம் மற்றும் புனர்வாழ்வு காரியாலயம் மூலமாக வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியிலிருந்து சுயதொழிலுக்காக உபகரணங்களும் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் ஆலோசனைக்கமைய, புனர்வாழ்வு திணைக்களத்தின் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, பிரிகேடியர் யூ. எஸ் பி. தர்சனலியனகே, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹக புஸ்பகுமார ஆகியோர் கலந்து கெண்டனர்.
Eelamurasu Australia Online News Portal