அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வென்றதன் மூலம் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக 2 மணி 20 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 6-1, 7-6 (7/4), 6-2 என்ற செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். 5 முறை அவுஸ்ரேலிய ஓபனில் சாம்பியன் ...
Read More »குமரன்
மெல்பேர்ண் தைப்பொங்கல் விழா
தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 அன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களால் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டுள்ளது. காலை 10.00 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு “விந்தம்” தமிழ்ப்பாடசாலை மாணவர்களது வணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது, அடுத்து தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்களான சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறிளுத்தல் ஆகிய விளையாட்டுகள் ...
Read More »மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், எனது உயிருக்கு ஆபத்து !
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார். கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். மிக் கொள்வனவு ஊழலை அம்பலப்படுத்தியதால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று லசந்த விக்கிரமதுங்க அச்சம் கொண்டிருந்தார் என்று லசந்த குடும்பத்தினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் மார்ச் ...
Read More »அவுஸ்ரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கம்!
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவுஸ்ரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. மெல்போர்னில் நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தின் போது அவுஸ்ரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ...
Read More »அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழாவில், முதல் சுற்றில் பெடரர், வாவ்ரிங்கா வெற்றி பெற்றனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. கால் முட்டி காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு சவால்மிக்க டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தகுதி நிலை வீரர் ஜூர்ஜென் மெல்சரை (ஆஸ்திரியா) சந்தித்தார். இதில் 35 வயதான ...
Read More »பீட்டாவில் த்ரிஷா இல்லை: தாயார் உமா விளக்கம்
ஜல்லிக்கட்டிற்கு எதிரான எந்த கருத்தையும் த்ரிஷா தெரிவிக்கவில்லை எனவும் பீட்டா அமைப்பிலும் அவர் இல்லை எனவும் த்ரிஷா தாயார் உமா விளக்கம் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக அவருக்கு எதிராக இணையத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிரான மீம்ஸ்-கள் பரப்பப்பட்டு வந்தன. இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து த்ரிஷா தற்காலிகமாக வெளியேறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்குத்தான் எதிரானவள் இல்லை எனவும், பிறப்பால் ஒரு தமிழச்சி என்றும் அதில் தான் பெருமை ...
Read More »கண்ணிவெடியை அழிக்க குட்டி விமானம்
கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி விமானத்தை, குஜராத்தை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜாலா (14) என்ற சிறுவன், கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார். கண்ணிவெடியில் சிக்கி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழப்பதுடன், கால்களையும் இழக்கின்றனர் எனக் கூறிய அச்சிறுவன் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த குட்டி விமானத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விமானத்தை இன்னும் மேம்படுத்தி பயன்படுத்துவது தொடர்பாக, ஹர்ஷவர்தன் ஜாலாவுக்கு குஜராத் மாநில அரசு 5 கோடி ...
Read More »விண்ணிலிருந்து விழுந்த மர்ம உயிரினம்?
அவுஸ்ரேலியாவில் கடந்த புதன்கிழமை பெய்த மழையில் வித்தியாசமான உயிரினம் ஒன்று சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அவுஸ்ரேலியாவின் Kintore நகரத்தில் பலத்த வெள்ளம் ஏற்பட்டது. அதனால் அந்த நகரத்தில் உள்ள தேசிய பூங்காக்கள் மூடப்பட்டது. இதில் Finke Gorge தேசிய பூங்காவில் உள்ள பள்ளங்களில் வித்தியாசமான முறையில் இறால் போன்ற சிறிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தலை வேற்றுக்கிரகவாசிகளின் தோற்றத்தைப்போல் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. குறித்த உயிரினம் மீன் போன்று காணப்பட்டாலும் இறாலின் தோற்றத்தை போன்றும், இதன் உடல்கள் முழுவதும் பெரிய கவசத்தை ...
Read More »அவுஸ்ரேலிய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்ப்பு
இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாதன் லயன், ஆஷ்டன் அகர், ஸ்டீவ் ஓ கீபே, மிட்செல் ஸ்வெப்சன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் அவுஸ்ரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் பிப்ரவரி 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய ஆடுகளத்தில் சுழற்பந்து ...
Read More »அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்திகதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலில் வருவது ஆஸ்திரேலிய ஓபன். இந்த ஆண்டுக்கான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை பட்டை தீட்டி வருகிறார்கள். ...
Read More »