தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 அன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களால் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டுள்ளது.
காலை 10.00 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு “விந்தம்” தமிழ்ப்பாடசாலை மாணவர்களது வணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது, அடுத்து தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்களான சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறிளுத்தல் ஆகிய விளையாட்டுகள் நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் முதியவர்களால் பாகுபாடின்றி மிகவும் உற்சாகத்துடன் விளையாடப்பட்டது அத்துடன் சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பலூன் உடைத்தல் ஆகிய விளையாட்டுக்களும் சிறப்பாக நடைபெற்றன.
மிகவும் குறுகிய காலப்பகுதியில் மெல்பேரண் மேற்கு இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்த பொங்கல் விழா பலரது கவனத்தையும் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.