குமரன்

சிறீலங்கா – அவுஸ்ரேலியா இடையில் மூன்று உடன்படிக்கைகள்!

சிறீலங்கா  மற்றும் அவுஸ்ரேலியாவுக்கிடையில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் இன்று காலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கன்பெராவிலுள்ள அவுஸ்ரேலிய மத்திய பாராளுமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு பிரிவுகளில் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் ...

Read More »

மைத்திரி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு!

அவுஸ்ரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்துள்ளார். கென்பராவில் உள்ள  நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி கென்பரா நகரில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் கென்பரா நகரில் உள்ள சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் நேற்று(24)  விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Read More »

எனது முயற்சியில் தோற்றுவிட்டேன்- சேரன்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் சேரன் தனது முயற்சியில் தான் தோற்றுவிட்டேன் என்று ரசிகர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். “பாரதி கண்ணம்ம” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சேரன். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், திருட்டு விசிடி-க்களை ஒழிக்கும் விதமாக. சி2எச் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார். அதாவது, சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி அவர் இயக்கிய ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற ...

Read More »

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ வெளியிடப்பட்டது

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ லேப்டாப் வெளியிடப்பட்டது. ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சர்பேஸ் ப்ரோவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சர்பேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் இவற்றின் முன்பதிவு துவங்கவுள்ள நிலையில், விலை 799 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,000 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை சர்பேஸ் ப்ரோ லேப்டாப்பில் 12.3 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே, ...

Read More »

கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்ற மைத்திரி!

அவுஸ்திரேலியாவிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கென்பரா நகரில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் நேற்று (24) பங்குபற்றியதுடன் கென்பரா நகரில் அமைந்துள்ள கம்பா விகாரைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது சமய கிரியைகளை நடாத்திய விகாராதிபதி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கியதுடன் அங்கு வருகை தந்திருந்த இலங்கையர்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.  

Read More »

மைத்திரி கன்பரா தாவரவியல் பூங்காவில் மரம் நட்டார்!

அவுஸ்ரேலியாவிற்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கன்பராவிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காவுக்கு நேற்று (24) விஜயம் செய்தார். கன்பரா முதலமைச்சரைப் பிரதிநிதித்துவப்படுத்தி கன்பராவின் சட்ட மா அதிபர் கோல்டன் றம்சே மற்றும் பூங்காவின் பதில் கடமைபுரியும் நிறைவேற்று முகாமையாளர் ஸ்கொட் ஸட்லியும் ஜனாதிபதியை வரவேற்றனர். அவுஸ்ரேலியாவுக்கான தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் மைத்திரி பூங்காவில் மகோகனி மரக்கன்று ஒன்றை நாட்டினார். இந்த நிகழ்வில் கன்பராவின் சட்ட மா அதிபர் ரம்சே தெரிவிக்கையில் சுற்றாடல்துறை அமைச்சராகவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயம் உண்மையிலேயே ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது மைத்திரி!

சிங்கப்பூரில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும்  போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ முகநூல்  பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலமுறை பயணம் செய்துள்ளேன். அவரும் அவரது மனைவி மைத்திரியும் இதே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பலியான ஈழ புகலிடக் கோரிக்கையாளர்!

அவுஸ்ரேலியாவில், ஆஸ்துமா நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஈழத்தவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. அருள்செல்வம் வேல்முருகு என்ற 35 வயதுடைய ஈழ புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளே மரணத்திற்கு காரணம் என மேற்கு அவுஸ்திரேலிய மரண விசாரணை அதிகாரி பெரி கிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவு குடிவரவு தடுப்பு நிலையத்திற்கு சிகிச்சைகளுக்காக வருகை தந்த சில மணித்தியாலங்களுக்குள்ளேயே ஈழ புகலிடக் கோரிக்யைாளர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஈழ அகதிகள்!

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தை ஈழம் உள்ளிட்ட அகதிகள் எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தாமலும், அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்காமல் இருப்பவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்காத நிலையில், 7500க்கும் மேற்பட்ட ஈழம் உள்ளிட்ட அகதிகள் அவுஸ்ரேலியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அனைவருக்கும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த காலப்பகுதியில் தங்களை நியாயமான அகதிகள் என நிரூபிக்க ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மைத்திரிக்கு கன்பெராவில் வரவேற்பு!

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்ரேலியா பயணமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கென்பராவைச் சென்றடைந்தார். ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர். ஜனாதிபதி சிறிசேனவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளவும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி  மைத்திரியை ...

Read More »