மைத்திரி – அவுஸ்ரேலிய பிரதமர் சந்திப்பு!

அவுஸ்ரேலியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்துள்ளார்.

கென்பராவில் உள்ள  நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புலின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி கென்பரா நகரில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் கென்பரா நகரில் உள்ள சூரிய மின்சக்தி நிலையத்திற்கும் நேற்று(24)  விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.