கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது இதனை இந்து சம்மேளனம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த தெரிவுகளை இரத்துச்செய்து விட்டு மீண்டும் நேர்முகப்பரீட்சை நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும். என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா. அருண்காந்த் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் கடந்த முப்பது வருட யுத்த காலப்பகுதியில் பல சொல்லொனா துன்பங்களுக்கு மத்தியில் நாட்டைவிட்டு ஓடாமல் எமது இனத்தின் வேர்களான மாணவச் செல்வங்களுக்குப் பெரும் ...
Read More »குமரன்
வீடுகள் , குடிசன மதிப்பீட்டை இரு வருடத்திற்கு ஒருமுறை நடத்த தீர்மானம்!
இரு வருடத்திற்கு ஒருமுறை நாட்டில் வீடுகள் மற்றும் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிசன மதிப்பீடு புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் குடிசன மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமர சத்ரசிங்க மேலும் தெரிவிக்கையில் பத்து வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீட்டுக்கு மேலதிகமாக இது மேற்கொள்ளப்படுகிறது. இதற்கமைய மே மற்றும் ஜூன் மாதங்களில் வீடு மற்றும் குடிசன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக பயிற்சி பெற்ற அதிகாரிகள் சிலர் இந்த இரண்டு ...
Read More »அனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்!
கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது. கூகுள் I/O 2018 நிகழ்வில் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் விவரிக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் புதிய அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் செயலியில் சேர்க்கப்பட இருக்கின்றன. அந்த வகையில் கூகுள் மேப்ஸ் செயலியில் விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் எனும் உதவியோடு இயங்கும் சுவாரஸ்ய அம்சம் விவரிக்கப்பட்டது. விஷூவல் பொசிஷனிங் சிஸ்டம் உங்களது ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கூகுள் மேப்ஸ் செயலியில் ...
Read More »நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக?
புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார் ;நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று. இக்கேலிச்சித்திரத்தைச் ...
Read More »பெற்றோர்களை வரவழைக்க வேண்டுமாயின் ஆண்டு வருமானம் 45 ஆயிரத்து 185 டொலர் தேவை!
அவுஸ்திரேலியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்களது பெற்றோர்களை வரவழைப்பதில் இருந்த சிக்கல் நிலைக்கு தீர்வு காண அரசு தீர்மானித்துள்ளது. நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஏப்ரல் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதை ரத்து செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரை காலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெற வேண்டும். இந்த நடைமுறையை இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்திருந்தது. மேலும் தனி ...
Read More »மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வெளிநாடு செல்ல தடை!
மலேசியா நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு செல்ல புதிய அரசு தடை விதித்துள்ளது. மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றுள்ளார். முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ...
Read More »எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முறைப்பாடு!
எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். “எனினும், 16 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்கு உரிய விடயம்” என ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.
Read More »உலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ!
ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் செய்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை செயல்படுத்தியிருக்கிறது. ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது. புதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் ...
Read More »வடக்கு-கிழக்கு உள்ளிட்ட 6 மாகாணசபைகளுக்கு நவம்பரில் தேர்தல்!
வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளுக்கு வரும் நவம்பரில் தேர்தலை நவம்பரில் நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக உயர்மடத் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுக் கோரல் வரும் செப்ரம்பரில் அறிவிக்கப்படும் எனவும் அந்தத் தகவல் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் கொழும்பு சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாண சபைகள் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான தயார்படுத்தல்களை முன்னெடுக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டிருந்தார். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு பெரும்பாண்மையான கட்சிகள் கேட்டிருந்தன. எனினும் அரசு அதற்கு ...
Read More »விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்?
மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்கினேஸ்வரன் ...
Read More »