உலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ!

ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் செய்திருக்கிறது. ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை செயல்படுத்தியிருக்கிறது.

ஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது.
புதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3டி போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.
இதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டு இன்டகிரேட்டெட் ஸ்ட்ரக்சர்டு லைட் கேமரா பொருத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனினை ஒப்போ பயன்படுத்தியது. இது ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3டி டெப்த்-ஐ சேகரிக்கிறது. பின் இந்த தகவல்கள் 5ஜி சூழலில் அனுப்பப்பட்டு டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது.
அதிவேக, அதிக திறன் மற்றும் குறைந்த லேட்டென்சி மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு துறையில் புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. மொபைல் இன்டர்நெட் யநிஜ உலகிற்கும், டிஜிட்டல் உலகிற்கும் இடைய இருக்கும் எல்லைகளை குறைக்கிறது. அந்த வகையில் 3டி தரவுகள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.
புதிய 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உருவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி பைலட் தி்ட்டத்திற்கென குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதில் முதன்மை நிறுவனமாக ஒப்போ இருக்கும் என தெரிவித்திருந்தது.