ஆப்கானிஸ்தானின் தகார் மாநிலத்தில் மதபாடசாலையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிராமமொன்றில் அமைந்திருந்த மத்ரஸாவின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள உள்ளுர் அதிகாரிகள் மசூதியின் இமாமும் காயமடைந்துள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல் இடம்பெற்றவேளை இமாமும் மாணவர்களும் மாத்திரம் மசூதியிலிருந்தனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்கள் அனைத்தும் சிறுவர்களின் உடல்கள் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன. மாநில ஆளுநரின் பேச்சாளரும் சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர் ...
Read More »குமரன்
தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவ்
இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்ததது. இந்திய கிரிக்கெட் கபில் தேவின் சாதனைகள் நீங்காத இடத்தை பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி ...
Read More »இருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்
இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் இருபதாவது திருத்தம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்ப்பு என்பது பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்ததைவிட வெளியே சிவில் சமூக அமைப்புக்களிடம் அதிகமாக இருந்தது. அதற்கும் மேலாக சில முக்கியமான பௌத்த மத பீடங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வந்திருந்தன. ஆனாலும் பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்த பலவீனங்களைக் கொண்டு இருபது நிறைவேற்றப்பட்டுள்ளது எனலாம். அத்தகைய பலவீனத்தை அதிகம் வெளிக்காட்டியவர்களாக சிறு கட்சிகளின் தலைமைகளைக் கூறலாம். ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தவிர்ந்த ...
Read More »டயானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்த நிலையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆதரவாக வாக்களித்திருந்தார். இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் சர்வாதிகாரத்தின் தொடக்கம் என்றும் தற்போதைய அரசாங்கத்தின் முடிவின் ...
Read More »மட்டு. மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து சமல் தலைமையில் அவசர கூட்டம்
கொழும்பு பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மகாவலி காணி தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது. இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது. இந்தக் கூட்டத்திற்கு மட்டக்களப்பை சேர்ந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பா.உறுப்பினர்களான கருணாகரன், சாணக்கியன், சார்ல்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகளும் உட்பட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக மங்களேஸ்வரி ...
Read More »கொவிட்- 19: தடுப்பூசி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் மரணம்!
பிரேஸிலில் கொரோனாத் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்(Oxford University), அஸ்ட்ரா ஜெனேகா (Astra Zeneca) மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனைகள் பிரித்தானியா, இந்தியா, பிரேஸில், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறன. இந் நிலையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் திடீரென உயிரிழந்ததாக பிரேஸில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் உயிரிந்த 28 வயதுடைய தன்னார்வலர், ரியோ ...
Read More »20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?
20வது திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வாக்களித்துள்ளனர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நசீர் அஹமட் பைசல் ஹாசிம் எச்எம்எம் ஹாரீஸ் எம் எஸ் தௌபீக் முஸ்லீம் தேசிய கூட்டணியின் ஏஏஎஸ்எம் ரஹீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இசாக் ரஹ்மான். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரவிந்த குமார் ஆகியோர் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்
Read More »ஜனநாயகத்தை கொலை செய்கின்றது அரசாங்கம்
சிறிலங்கா அரசாங்கம் தேசத்தின் ஜனநாயகத்தை 20வது திருத்தம் மூலம் கொலைசெய்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா டுவிட்டரில் சற்று முன்னர் பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தங்களை ஆட்சிக்குகொண்டுவந்தவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசாங்கம் ஏதேச்சதிகாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது என ஹர்சா டி சில்வா பதிவிட்டுள்ளார்.
Read More »விடுதலைப் புலிகள் மீதான தடை; பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணைய தீர்ப்பின் அடுத்த கட்டம் என்ன?
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை கடந்த ஆண்டு நீட்டித்த பிரிட்டன் உள்துறையின் நடவடிக்கை தவறானது என்று தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் உள்துறைச் செயலாளருக்கு எதிராக ஆறுமுகம் உள்ளிட்ட மனுதாரர்கள் மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை கடந்த ஜூலை விசாரித்த நீதிபதிகள் எலிசபெத் லெய்ங், ரிச்சர் விட்டாம், ஃபிலிப் நெல்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது தீர்ப்பை அளித்துள்ளது. அதில் “விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை நீட்டிக்க, உள்துறை கவனத்தில் ...
Read More »தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் அழைப்பு
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே வீரப்பனின் வாழ்க்கை கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரிலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கை ‘குப்பி’ என்ற ...
Read More »