இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வென்று சாதனை படைத்ததது. இந்திய கிரிக்கெட் கபில் தேவின் சாதனைகள் நீங்காத இடத்தை பெற்றுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 16 வருடங்கள் விளையாடி உள்ள கபில் தேவ்? 131 டெஸ்ட் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான கபில் தேவ் இந்திய அணியை சிறந்த முறையில் வழிநடத்தியும் உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal