பிரேஸிலில் கொரோனாத் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்(Oxford University), அஸ்ட்ரா ஜெனேகா (Astra Zeneca) மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட பரிசோதனைகள் பிரித்தானியா, இந்தியா, பிரேஸில், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறன.
இந் நிலையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலர் திடீரென உயிரிழந்ததாக பிரேஸில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும் உயிரிந்த 28 வயதுடைய தன்னார்வலர், ரியோ டி ஜெனிரோ நகரைச் சேர்ந்தவர் என்ற தகவல் மாத்திரம் தற்பொது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal