ஆப்கானிஸ்தானின் தகார் மாநிலத்தில் மதபாடசாலையொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கிராமமொன்றில் அமைந்திருந்த மத்ரஸாவின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள உள்ளுர் அதிகாரிகள் மசூதியின் இமாமும் காயமடைந்துள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல் இடம்பெற்றவேளை இமாமும் மாணவர்களும் மாத்திரம் மசூதியிலிருந்தனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட உடல்கள் அனைத்தும் சிறுவர்களின் உடல்கள் என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.
மாநில ஆளுநரின் பேச்சாளரும் சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளார்.

எனினும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை நிராகரித்துள்ளதுடன் தலிபான் தீவிரவாதிகளே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமான ஆப்கான் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
Eelamurasu Australia Online News Portal