குமரன்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து சமந்தா விலகல்?

விஜய் சேதுபதி படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால், நடிகை சமந்தா விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். இதனால் சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா, சேச்சி என்றெல்லாம் சமந்தா அழைப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் தனது முக்கியத்துவம் குறைவதால் சமந்தா இந்த முடிவை ...

Read More »

வரிசையாக தற்கொலை செய்துகொள்ளும் அவுஸ்திரேலிய ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய ராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வெளியான பகீர் அறிக்கைக்கு பின்னர் ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் சில அவுஸ்திரேலிய துருப்புக்கள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றதாக இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தின. இந்த விவகாரம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்க ஆதரவுடைய விசாரணையை முன்னெடுக்க முடிவாகியுள்ளது. இந்த நிலையிலேயே, மூன்று வார இடைவெளியில் 9 அவுஸ்திரேலிய ராணுவத்தினர் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், அவுஸ்திரேலிய துருப்புகள் நிராயுதபாணியான ஆண்களையும் குழந்தைகளையும் கொல்லும் காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் வெளியாகி ...

Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி….

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு ...

Read More »

அரபிக்கடலில் விபத்துக்குள்ளான போர் விமானத்தின் விமானி சடலமாக மீட்பு

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் -29 கே ரக போர்விமானம் கடந்த 26-ம் திகதி பயிற்சியின்போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26-ந் திகதி புறப்பட்ட மிக்29 கே போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது அன்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால், நிஷாந்த் சிங் என்ற விமானி காணவில்லை. இதையடுத்து, மாயமான விமானி நிஷாந்த் சிங்கை தேடும்பணியில் கடற்படை, விமானப்படை ...

Read More »

நீதியமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு

மஹர சிறையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கட்ட குழுவின்  அறிக்கையானது இன்று (7) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியால் ஓய்வுப்பெற்ற மேன்முறையீட்டு நீதியரசர் குசலா சரோஜினி தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கபட்டது. குறித்த குழுவின் அறிக்கையே இன்று (7) குசலா சரோஜினியால்  நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Read More »

அமெரிக்க, இந்திய அணுகுமுறையும் ஈழத் தமிழர்களும்

2009ஆம் ஆண்டு இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் போட்டியைச் சாதமாகப் பயன்படுத்தி அப்போதைய இலங்கை இராணுவத்தின் பலவீனங்களை இந்த நாடுகளின் இராணுவ உதவிகள், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இலங்கை எவ்வாறு ஈழப் போரை இல்லாதொழித்ததோ, அதேபோன்று 2020இல் ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்களை இந்தப் புவிசார் அரசியலின் போட்டிகளைப் பயன்படுத்தி இலங்கை மீட்டெடுக்கும் வாய்ப்புகளே அதிகம். இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அரசு அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டுமென்ற ஆழமான கடினமாக பரிந்துரை ஒன்றை இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் ...

Read More »

கிளி. மாவட்டத்தில் இதுவரை 17 பேருக்கு கொவிட் தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 17 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் ஏற்கனவே குணமடைந்து வீடு சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்டத்தில் தற்போது கொவிட் 19 தொடர்பான நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மாவட்டத்தில் இதுவரை 17 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ...

Read More »

அகதிகளின் வழக்குளை விசாரிக்க ஆஸ்திரேலிய நீதி மன்றம்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் ஆஸ்திரேலியாவின் எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதம் மேலெழுந்துள்ளது. இது தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் முறையீட்டில், புலம்பெயர்வு சட்டத்தின் அடிப்படையில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்பான விவகாரங்களை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இம்முறையீடு தொடர்ந்து ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், புலம்பெயர்வு சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவு மூலம் கீழ் நீதிமன்றங்களின் அதிகாரத்தை பறிக்க இயலாது ...

Read More »

கேலிச்சித்திரம் குறித்து அமைச்சர் பந்துல சீற்றம்

அரசசெய்தித்தாள் ஒன்றில் தன்னை பற்றி வெளியான கேலிச்சித்திரம் குறித்து அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த பத்திரிகைகள் சில சர்வவல்லமை படைத்த அதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயற்படுகின்றன என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த சர்வவல்லமை படைத்த அதிகாரிகள் ஜனாதிபதி பிரதமர் நாடாளுமன்றம் ஆகியவற்றின் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் விதததில் செயற்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பத்திரிகையின் நிர்வாகத்தினரை இந்த கேலிச்சித்திரம் தொடர்பில் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் அழைக்கவேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை நம் கண்முன்னே காணலாம் – உலக சுகாதார நிறுவன தலைவர் நம்பிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இணையவழியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்” என கூறினார். மேலும், “கொரோனா ...

Read More »