*ஐ. நா. முறைமையை மறுசீரமைப்பதற்கானதருணம். *தடை செய்யப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை *சிஓபி 26 மாநாட்டிற்கு பிறகு ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார் *இலங்கையைவிசேடமாக இலக்கு வைக்கும் பொறி முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை *எங்களுக்கு எதிராக எவர்கள் ஆதாரத்தை வழங்கு கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் *ஐ ஸ்மின் சூக் கா ஒரு பிரசாரகர் *அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அரசின் எதிரிகளாக பார்க்கப்படவில்லை *ஒரு நாட்டுடன் மட்டும் பிரத்யேக உறவென்று இல்லை *ஜெனீவா காரணமாக வே அமெரிக்காவுடனான ...
Read More »குமரன்
தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை – கனிமொழி
தமிழர்களுக்கு யாரும், யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொமெட்டோ சர்ச்சை தொடர்பாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பெருநிறுவனங்களாக சொமெட்டோ, ஸ்விக்கி ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக். 18) சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் உணவகத்தில் காம்போவாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழுமையாக உணவு டெலிவரி ஆகாததால் சொமெட்டோ கேர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை ...
Read More »லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் மத்திய மாகாண முதலமைச்சர் ஆவாரா?
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு இலங்கையில் பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டிக்கு பல புதிய முகங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளன. மத்திய மாகாண சபைத் தேர்தலில் பிரபல அரசியல் காட்சிகள் பல போட்டியிடவுள்ளன. இது மத்திய மாகாண சபை தேர்தல் வரலாற்றிலேயே நாட்டின் அரசியலில் ஒரு முன்னோடியாக அமையவுள்ளள்ளமை தெரியவந்துள்ளது. கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற ...
Read More »நிமலராஜனின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டன. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது மலர் மாலையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண் ணன் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் ஆகியோர் நிமலராஜனின் திருவுருவ படத்துக்கு அணிவித்தனர். அதனையடுத்து மாநகர சபை உறுப்பினர் ஜெயசீலன் சுடரேற்றியதைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழிலிருந்து ...
Read More »காந்தி தொகுப்பு நூல்கள்: ஓர் இமாலய முயற்சியின் கதை
நூறு தொகுதிகளைக் கொண்டிருக்கும் ‘மகாத்மா காந்தி எழுத்துகளின் தொகுப்’பின் (The Collected Works of Mahatma Gandhi- CWMG) முதல் தொகுதியில் முதல் பதிவே ஒரு பாவமன்னிப்பைப் பற்றிய நினைவுகூரல்தான்: “என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி, என் தந்தையிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி, நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்குத் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டாம் ...
Read More »கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் துறைமுக அதிகாரசபையின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொள்முதல் நடவடிக்கைகள் அடுத்த வாரம் நிறைவடையும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். கிழக்கு முனையத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 12 பளு தூக்கிகள் கொண்ட 1,400 மீட்டர் நீளத்துடன் முழுமையாக பொருத்தப்பட்ட முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது- சரத் வீரசேகரவிற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பதில்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த அரசாங்கம் போன்று அரசாங்கமொன்று ஏதேச்சாதிகார போக்கு கொண்டதாகவும் சட்டத்தின் ஆட்சியை மதிக்காததாகவும் காணப்படும்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சரத்வீரசேகர அரசமைப்பின் 14 வது பிரிவு குறித்து கேள்விப்படவில்லை போல தோன்றுகின்றது. ஜனநாயகத்தில் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி அரசாங்கம் தனது நடவடிக்கைக்கு அல்லது நடவடிக்கை இன்மைக்கு ...
Read More »கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஆஸ்திரேலியா
கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரசுக்கு எதிராக 93 சதவீதம் பாதுகாப்பானது என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் புனே நகரில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வினியோகிக்கிறது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச பயணங்கள் படிப்படியாக இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகின்றன. எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை மட்டுமே பெரும்பாலான நாடுகள் அனுமதித்து வருகின்றன. ஒரு நாட்டில் ...
Read More »கிம் ஜாங் அன் சகோதரிக்கு முக்கிய பதவி
அமெரிக்காவின் பொருளாதார தடைகளும், தென்கொரியாவுடன் அமெரிக்காவின் கூட்டு போர்ப்பயிற்சியும் தங்கள் நாட்டுக்கு விரோதமான போக்கு என்று வடகொரியா நம்புகிறது. வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சிக்கு தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ள கிம் ஜாங் அன்னின் இளைய சகோதரி கிம் யோ ஜாங் (வயது 34), எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் செல்வாக்கு பெற்று வந்தார். கிம் ஜாங் அன்னின் ஆலோசகராகவும் விளங்கினார். அது மட்டுமின்றி, அவரது அரசியல் வாரிசாகவும் கருதப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு தென்கொரியாவின் தேசிய உளவுத்துறை, ...
Read More »விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது ...
Read More »