கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் துறைமுக அதிகாரசபையின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொள்முதல் நடவடிக்கைகள் அடுத்த வாரம் நிறைவடையும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கிழக்கு முனையத்தை 2024 ஆம் ஆண்டிற்குள் 12 பளு தூக்கிகள் கொண்ட 1,400 மீட்டர் நீளத்துடன் முழுமையாக பொருத்தப்பட்ட முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.