குமரன்

விஷால் – ஆர்யா படத்தில் இணைந்த இளம் நடிகை

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இளம் நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். விஷால் நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. கொரோனா பரவலுக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. விடுபட்ட சில காட்சிகளை தற்போது படமாக்கி உள்ளனர். இதற்காக 6 நாட்கள் படப்பிடிப்பை விஷால் செலவை குறைத்து சிக்கனமாக நடத்தி முடித்துள்ளார். இப்படத்தை அடுத்து அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ...

Read More »

சீதுவ தங்கும் விடுதியில் 42 பேருக்கு கொரோனா

சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் 42 பேர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரி வித்துள்ளார். நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக கம்பஹா பிரதேசத்தில் 35பேர், மினு வங்கொட பிரதேசத்தில் 38பேர் , திவுலபிட்டிய பகுதியில் 34 பேர் ஆகியோர் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் 7 பேர் , கிரிதிவெல பகுதியில் 4 பேர் கொரோ னா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்படுவதால் ...

Read More »

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் உறவினர்

இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதால் பிரச்சினைகள் எழுந்தன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரை அழைத்து நான் விளக்கம் கோரினேன் எனஅவர் தெரிவித்துள்ளார். எனது ஆட்சிக்காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பபெறுகின்றன என இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவைக்கு அறிவித்ததுஎன சிறிசேன தெரிவித்துள்ளார். படையினரும் காவல் ...

Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே கொரோனாவை தடுக்கும் தீர்வாகாது

கொரோனா வைரசை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்தார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் ...

Read More »

நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளில் வழக்கு

நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினர்  நடவடிக்கை எடுத்துள்ளனர். மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில், “மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட ...

Read More »

பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா இலங்கை

இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்ப்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மூலோபாய நகர்வில் வெளிப்படையில்லாத போக்கினால் அதிக குழப்பமிக்க கொள்கைகளை நோக்கி செயல்படுகிறது. அது மட்டுமன்றி முன்பின் முரண்பாடான கொள்கைகளையும் வகுக்க முயலுகிறது. இக்கட்டுரையும் அத்தகைய சூழலை வாசகனுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் அமையவுள்ளது.   இந்து சமுத்திரப் ...

Read More »

அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் சர்ச்சை

அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ்மாநில பிரதமர் கிளாடிஸ்பெரெஜெக்லியன் சீனாவுடன் தொடர்பை பேணும் அரசியல்வாதியொருவருடன் தனக்கு இரகசிய உறவு உள்ளதாக அறிவித்துள்ளமை அவுஸ்திரேலிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடனான வர்த்தக உறவுகளை ஏற்படுத்தி பணம் சம்பாதித்தார் எனகுற்றம்சாட்டப்பட்டுள்ள என்ற அரசியல்வாதியுடன் இரகசிய தனிப்பட்ட உறவுஉள்ளது என நியுசவுத்வேல்ஸ் பிரதமர் ஊழல் குறித்த விசாரணைகளின் போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார். ஊழல் குறித்த நியுசவுத்வேல்ஸ் சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சாட்சியமளித்த பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் எனது குடும்பத்தினருக்கோ அல்லது நெருங்கிய நண்பருக்கோ கூட தெரிவிக்காத ...

Read More »

ஐந்து மணி நேரம் சாட்சியமளித்த ரணில்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுமார் 5 மணித்தியால சாட்சியளிப்பின் பின்னர், சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறினார்.

Read More »

 இயற்கையை அழித்து எங்களையே அடித்துக்கொள்ளும் இனமானோம் நாம்!

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பாதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மற்றும் ஊடகவியலாளர் குமணன் ஆகியோர் மீதே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரக்கடத்தில் ஈடுபட்ட முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் எனவும் ...

Read More »

நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்

வடகொரியாவில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியின் போது, அதிபர் கிம் ஜாங் உன் உணர்ச்சிவசமாக பேசி மக்களைப் பார்த்து கண்கலங்கினார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ராணுவ அணி வகுப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ராணுவ அணி வகுப்பின்போது ஹவாசோங் -16 என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது வடகொரியா. இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது ...

Read More »