சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் 42 பேர் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரி வித்துள்ளார்.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக கம்பஹா பிரதேசத்தில் 35பேர், மினு வங்கொட பிரதேசத்தில் 38பேர் , திவுலபிட்டிய பகுதியில் 34 பேர் ஆகியோர் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் 7 பேர் , கிரிதிவெல பகுதியில் 4 பேர் கொரோ னா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்படுவதால் தங்கள் தாங்களை கொரோனா தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal