குமரன்

உலகம் 2021 எப்படி இருந்தது?

கரோனா பெருந்தொற்று அன்றாட நடவடிக்கைகளில் நீக்கமற இடம்பிடித்துவிட்டது. 2021-ன் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்று ஜோ பைடன் அதிபரானது. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகல், ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க நிதியை விலக்கிக்கொள்ளுதல், ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து விலகல், வடகொரியாவுடன் மோதல் போக்கு என்று உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ட்ரம்ப் கருதப்பட்டார். அவரது தோல்வி பலரையும் பெருமூச்சுவிட வைத்தது. ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபரானது அமெரிக்க வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. இந்த ...

Read More »

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான காவல் துறை  அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்தக் கடமைகளுக்காக கொழும்பில் அதிகளவான புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ...

Read More »

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியவர் பேராயர் டுட்டு

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டுட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது. தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட ...

Read More »

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகளையும் ...

Read More »

விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சில படங்களில் நாடக கலைஞராகவும் கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி தெருக்கூத்து ...

Read More »

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா ...

Read More »

மனித வியாபாரம், ஆட்கடத்தலிலிருந்து உறவுகளைப் பாதுகாப்போம்!

மனித வியாபாரம்  என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அப்பாவிகளை இலக்காக கொண்டு, தமது சுயநலத்துக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஏமாற்றி, மோசடி செய்து, வஞ்சித்து, சுரண்டுவதன் ஊடாக, மனித வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இருந்த போதிலும், ஆட்கடத்தல் என்பது தானே ஒருவர் முன்வந்து சட்டவிரோதமாக தமது நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்வதாகும்.சட்டவிரோதமாகச் செய்யப்படும் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு அடுத்ததாக உலகில் இரண்டாவது மிகப்பெரிய குற்றத் தொழிலாக இந்த ஆட்கடத்தல் கருதப்படுகின்றது. மனித வியாபாரம்  ஒருவர் ஏமாற்றப்படுவதையும் ஆட்கடத்தல் என்பது  ஒருவரின் ...

Read More »

நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலியா வரவில்லை: ஈழத்தமிழ் அகதி

ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More »

பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு  டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்!

பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இரு அமெரிக்கர்களும் இணைந்துதான் நாட்டை நிர்வகிக்கின்றார்கள். மாறாக பிரதமரிடம் பெருமளவிற்கு அதிகாரங்கள் ...

Read More »

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு எவ்வாறு பணம் வந்தது !

மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். மத்திய வங்கியின் கையிருப்பு 3.1பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார் அப்படியாயின் அந்த நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் எமக்கு தெரியப்படுத்த அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள் ஆனால் இந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்ற விடயத்தை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எதற்காக மறைக்கவேண்டும் என ...

Read More »