குமரன்

சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை

சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என ஆர்டிஓ விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடந்த டிச.14-ந் தேதி கைது செய்தனர். ...

Read More »

மகனை தொடர்ந்து மகளையும் நடிக்க வைத்த விஜய் சேதுபதி

சிந்துபாத் படத்தில் மகனை நடிக்க வைத்த விஜய் சேதுபதி, தற்போது தனது மகளையும் முகிழ் என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர சுமார் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களில் மகன் சூர்யாவை சிந்துபாத் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி தானும் அப்படத்தில் ...

Read More »

2020 இல் பெற்றதும் கற்றதும் – “புதிய வழமை” இப்படித்தான் தொடரப் போகின்றதா?

உலக நாடுகள் அனைத்தையும் போலவே ஈழத் தமிழர்களுக்கும் 2020 என்பது கொடூரமான ஒரு வருடமாகவே கடந்து சென்றிருக்கின்றது. 2020 மார்ச் நடுப்பகுதியில் இலங்கைக்குள் பிரவேசியத்த கொரோனா, தீவின் பொருளாதாரத்தை ஸ்தம்பிதமடையச் செய்துவிட்டது. நாட்டின் அசைவியக்கத்தையும் இது பெருமளவுக்குப் புரட்டிப்போட்டுவிட்டது. புதிய அரசியல் குழப்பங்களுக்கும் இது காரணமாகிவிட்டது. கொரோனாவின் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், பேரினவாதம்தான் இலங்கையை ஆட்சி செய்யப்போகின்றது என்பது 2020 இல் நாம் கற்றுக்கொண்ட பாடம். 2020 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சிறுபான்மையினரை முற்றாக ஓரங்கட்டும் அவர்களுடைய செயற்பாடுகள் இலங்கையை ஒரு பௌத்த ...

Read More »

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.   வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பின்பக்க வீதியில் அமைந்துள்ள நல்லை ஆதினம் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள், இனவாதத்தைக் கக்காதீர்கள், எங்கள் உறவுகளைக் கொல்லாதீர்கள், எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?, மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள், ...

Read More »

கிளிநொச்சியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் 55 மோட்டார் எறிகணைகள் மீட்பு

கிளிநொச்சியில் பளை அரசாங்க மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த 55 மோட்டார் எறிகணை களை(ஷெல்) நேற்று காவல் துறை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மீட்டுள்ளனர். நிலத்தின் உரிமையாளர் குழி தோண்டிய போது இவற்றை அவதானித்து காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளார். காவல் துறை விஷேட அதிரடிப்படையினர் சகிதம் அனைத்து மோட்டார் எறிகணைகளையும் மீட்டெடுத்து அவற்றை செயலிழக்கச் செய்யவென கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் உத்தரவைப் பெற்றுள்ளனர்.

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகள் கனடா செல்ல முடியாத நிலை…!

ஆஸ்திரேலியாவில் உள்ள 97 அகதிகளை கனடாவுக்கு வரவேற்க கனடாவில் உள்ள Vancouver குடியமர்த்தல் முகமை தயாராக உள்ள நிலையில், இந்த திட்டத்துக்கு தற்போதைய கொரோனா சூழல் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. இந்த அகதிகளை கனடாவுக்குள் அனுமதிப்பதற்கான முதல்கட்ட விண்ணப்ப பணி நிறைவடைந்துள்ள நிலையில், சிட்னி நகரில் உள்ள கனடா விசா அலுவலகத்துக்கு அடுத்தக்கட்ட அனுமதிக்காக இந்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. “ஆனால், கொரோனா சூழல் இதனை அத்தனையும் மாற்றிவிட்டது,” என்கிறார் அகதிகளுக்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் சலீம் ஸ்பிண்டரி. கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கனடா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் சித்ரவதைக்கு உள்ளாகும் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு ஹோட்டலுக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. “முந்தைய ஹோட்டலில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய ஹோட்டலில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar. ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போரிலிருந்து, இலங்கையின் இனப்படுகொலைப் போரிலிருந்து, ஈரானிலிருந்து என உலகின் பல நாடுகளில் ...

Read More »

விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Boxing day அன்று Delahey பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் Colac-Lavers Hill வீதியால் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 8 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீண்டநேரமாகியும் தனது நண்பர் குறிப்பிட்ட இடமொன்றிற்கு வராததையடுத்து அச்சமடைந்த சக நண்பர் அவசர சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார். ...

Read More »

துபாயில் அடுத்த மாதம் இலக்கிய திருவிழா- மலாலா பங்கேற்கிறார்

துபாயில் அடுத்த மாதம் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று பேசுகிறார். துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி ஒரு பெண்ணாக பள்ளிக்கு சென்றதால் ...

Read More »

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது!

தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினி அறிவித்துள்ள நிலையில், உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை டிச.31-ந் தேதி வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி கூறியுள்ளதாவது, ”கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் ...

Read More »