குமரன்

பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் புதியசட்டத்தினை கிழித்தெறிந்த மாணவி!

மேற்குவங்காளத்தின்    கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் மாணவியொருவர் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகல்வடிவை கிழிந்து எறிந்து  தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்காளத்தின்  ஜாதவ்பூர் பல்கலைகழகத்தை சேர்ந்த டெபொஸ்மிட்டா சௌத்திரி என்ற மாணவியே இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வேந்தர் துணைவேந்தர் பதிவாளர் மத்தியில் குடியுரிமை சட்டத்தின் நகலை கிழித்து எறிந்துள்ள மாணவி  தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டம் இந்த நாட்டின் உண்மையான பிரஜைகள் தங்களை நிருபிக்கவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என அவர்குறிப்பிட்டுள்ளார். நான் பல்கலைகழகத்தை அவமதிக்கவில்லை ...

Read More »

‘கொலையாளிகளுக்கு’ மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் கறை அகலாது!

சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் பரிதாபத்திற்குரிய முறையில் தவறிழைப்பதாகவே இருக்கும். கடந்த வருடம் அக்டோபரில் துருக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் ...

Read More »

முல்லைத்தீவில் தெளிவாக தெரிந்த சூரிய கிரகணம்!

இன்று காலை இடம்பெற்ற சூரிய கிரகணத்தை முல்லைத்தீவில் தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததாக இலங்கை கோளரங்கத்தின் (Sri lanka Planetarium) பணிப்பாளர் திருமதி அருணா பிரபா பெரேரா தெரிவித்துள்ளார். இதனை அவதானிப்பதற்காக முல்லைத்தீவில் தமது பிரிவு முகாமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை இன்று தெளிவாக பார்க்கக்கூடியதாக இருந்ததுடன் சீரான காலநிலையும் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை இந்த பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More »

சவால்கள் ஏற்பட்டாலும் சபாநாயகர் பின்வாங்கப்போவதில்லை!

சம காலத்திலும் எதிர்காலத்திலும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவும் ஜனநாயக ரீதியான நாடாளுமன்ற முறைமைக்குள் முக்கியமான சம்பிரதாயங்களுக்குள் அடங்குகின்ற சலுகைகளை பாதுகாப்பதற்கான கடமையை நிறைவேற்றுவதில் , எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திப்படுத்துவதிலிருந்து சபாநாயகர் கருஜய சூரிய எந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டதன் பின்னர் அவரை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்டமை, நலன் விசாரித்தமை தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் அலுவலகத்தினால் இன்று ...

Read More »

தமிழ், தெலுங்கில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது – மீனா

தமிழ், தெலுங்கில் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று நடிகை மீனா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ரஜினி அங்கிள் என்ற அந்த குரலை மறக்க முடியாது. அந்த குரலுடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மீனா. பின்னர் கதாநாயகியாகவும் ரஜினி, விஜயகாந்த், அஜித், பிரசாந்த் என பல நடிகர்களுடன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் ...

Read More »

இந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், இங்கிலாநது 4-வது இடத்திலும் இருப்பதை என்னால் ஏற்க முடியாது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர்களின் தரவரிசை குப்பை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...

Read More »

மக்கள் தொகை கணக்கெடுப்பில் போலியான பெயர், முகவரியை கொடுங்கள்: அருந்ததி ராய்

மக்கள் தொகையை கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் போலியான பெயர் மற்றும் முகவரியை கொடுக்குமாறு பிரபல எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதற்கான கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை ...

Read More »

நீச்சல் குளத்தில் இறங்கி உடலை குளிர்வித்த கங்காரு!

சிட்னி அருகே உள்ள மெர்ரிவா நகரில் காட்டுத்தீ மற்றும் வெயிலின் காரணமாக, கங்காரு ஒன்று நீச்சல் குளத்தில் இறங்கி உடலை நனைத்து தன்னை குளிர்வித்துக்கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் ...

Read More »

கிறிஸ்துவின் பிறப்பு அன்றும்… இன்றும்…

2019 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசுவின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கிறோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும். தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதியில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி நாமும் ...

Read More »

கடவுள் அனைவரையும் நேசிக்கிறார் – நத்தார் தின திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ்

உலகின் 1.5 பில்லியன் கிறிஸ்தவ சகோதரர்களுடன் இணைந்து அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகின்றனர். இதே வேளை உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில்  நத்தார் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விழா  திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது தமது ஆசீர்வாத பேருறையில் திருத்தந்தை, “கடவுள் அனைவரையும் நேசிக்கிறார், நம்மில் மிக மோசமானவர்களையும் கூட நேசிக்கிறார்.” என தெரிவித்தார். “நீங்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கலாம், நீங்கள் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் ...

Read More »