உலகின் 1.5 பில்லியன் கிறிஸ்தவ சகோதரர்களுடன் இணைந்து அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகின்றனர். இதே வேளை உலகின் அனைத்து தேவாலயங்களிலும் நத்தார் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் நத்தார் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விழா திருத்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தமது ஆசீர்வாத பேருறையில் திருத்தந்தை,
“கடவுள் அனைவரையும் நேசிக்கிறார், நம்மில் மிக மோசமானவர்களையும் கூட நேசிக்கிறார்.” என தெரிவித்தார்.

“நீங்கள் தவறான கருத்துக்களைக் கொண்டிருந்திருக்கலாம், நீங்கள் ஒரு முழுமையான குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் … ஆனால் இறைவன் உங்களை தொடர்ந்து நேசிக்கிறார்” என அவர் கூறினார்.




Eelamurasu Australia Online News Portal