மேற்குவங்காளத்தின் கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் மாணவியொருவர் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகல்வடிவை கிழிந்து எறிந்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தை சேர்ந்த டெபொஸ்மிட்டா சௌத்திரி என்ற மாணவியே இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வேந்தர் துணைவேந்தர் பதிவாளர் மத்தியில் குடியுரிமை சட்டத்தின் நகலை கிழித்து எறிந்துள்ள மாணவி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் இந்த நாட்டின் உண்மையான பிரஜைகள் தங்களை நிருபிக்கவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
நான் பல்கலைகழகத்தை அவமதிக்கவில்லை புதியசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இதனை செய்தேன் என குறிப்பிட்டுள்ள அவர் இன்குலாப் ஜிந்தாபாத் எனவும் முழக்கமிட்டுள்ளார்.