குமரன்

ஈழத்தை  பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் – வட அயர்லாந்தைச் சேர்ந்த தாதிக்கும் திருமணம்

பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் வைத்தியராக பணிபுரிபவர் ஈழத்தை  பூர்வீகமாகக் கொண்ட அன்னாலன் நவரத்தினம். இதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிபவர் ஜான் டிப்பிங். இவர் வட அயர்லாந்தைச் சேர்ந்தவர். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இரு வீட்டாரிடமும் திருமணத்துக்கு சம்மதம் பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட்மாதம் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா பிரச்சினையால் கடந்த மார்ச் 23-ம் திகதி முதல் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு உள்ளது. எனவே, இருவருடைய பெற்றோரும் வருவதில் சிக்கல் ...

Read More »

முதல் பார்வை: பொன்மகள் வந்தாள்!

ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து, நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும் பிறகு சொல்கின்றனர். குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் ...

Read More »

திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கு ஈடே கிடையாது – சூர்யா

 திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது என்று நடிகர் சூர்யா பேட்டி அளித்துள்ளார். பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடுவது குறித்து பேட்டியளித்திருக்கும் நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது, ‘திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளை பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும் சூழலில் மாற்று வழியை கண்டறிவது அவசியமாக உள்ளது. மேலும் வணிக எல்லைக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படும் மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி நல்ல தளமாக உள்ளது. இதனால் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பூட்டப்பட்ட அறையில் இரு இளைஞர்கள்! படுக்கையறையில் தந்தையின் சடலம்!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் இருந்து அரை நிர்வாண கோலத்தில் இரு பதின்ம வயதினரையும், படுக்கையறையில் அவர்களின் தந்தையின் சடலத்தையும் காவல் துறையினர் மீட்டுள்ளனர். பிரிஸ்பேன் நகரில் உள்ள அந்த குடியிருப்பில் இருந்து வாய்விட்டு கதறும் சத்தம் தொடர்ந்து கேட்டுவந்ததையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்க தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறை , பூட்டப்பட்டிருந்த குடியிருப்பின் உள்ளே புகுந்து பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளனர். ஒரு அறையில் அரை நிர்வாண கோலத்தில் 17 மற்றும் 19 வயது இளைஞர்கள் பூட்டி ...

Read More »

கொரோனாவை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு!

கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் கபசுர குடிநீருக்கு உண்டு என சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை இயக்குனர் டாக்டர் கே.கனகவல்லி தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 18 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரத்து 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த ...

Read More »

சீன நாடாளுமன்றத்தில் நிறைவேறியது புதிய பாதுகாப்பு சட்டமூலம்

சீன நாடாளுமன்றம் ஹொங்கொங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஹொங்கொங், சீனாவின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசமாகும். அங்கே வெளியுறவு, இராணுவம் ஆகிய இரு துறைகளையும் சீனா கட்டுப்படுத்தும். ஏனைய அனைத்துத் துறைகளையும் ஹொங்கொங் அரசே நிர்வகிக்கும். 70 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹொங்கொங் பல தசாப்த காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அந்தநாள் முதல் இன்று வரை ஹொங்கொங், சீனாவின் காட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ...

Read More »

மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 8ஆவது நாளாக இன்று (28)இடம்பெற்றது.

Read More »

ஆறுமுகன் தொண்டமானுக்கு நாடாளுமன்றில் இறுதி அஞ்சலி

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கியப் பேழையை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Read More »

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மகேஷ் பாபு

தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரசின் தாக்கமும் அதன் காரணமாக நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை ரொம்பவும் பாதித்துள்ளன. இந்தநிலையில் தற்போதுதான் ஊரடங்கு விதிகள் சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் நடமாட ஆரம்பித்துள்ளார்கள். அவ்வாறு விதிமுறைகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்கவே கூடாது என வலியுறுத்தியுள்ளார் நடிகர் மகேஷ்பாபு. அவர் கூறியதாவது ’இப்போது தான் மெதுவாக வெளிவர தொடங்கியுள்ளோம். ...

Read More »

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள்

ஐதராபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஐதாராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க உதவி புரிந்து வருகிறார்கள். கடந்த 8-ந்திகதி கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அதன்பின் ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தெலுங்காவில் இருந்து வந்த பெண்ணுக்கு நேற்று ஆரோக்கியமான ...

Read More »