குமரன்

இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல்

வேலணைவங்களாவடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்டதால் இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வங்களாவடி பகுதியில் பிரச்சர நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர். அதன்போது அவ் இளைஞர்கள் காராசரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் ...

Read More »

போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் – பிரசன்னா ஆவேசம்

போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் என்று நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார். கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளத்தில், எவரும்‌ எவருடைய நம்பிக்கையையும்‌ ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய்‌ பேசப்படும்‌ மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன்‌ கேட்பதில்லை இவரையேன்‌ கேட்பதில்லை என்கிற வாதமும்‌ பயன்‌ தராது. அவரவர்‌ நம்பிக்கை ...

Read More »

சமாந்தர அரசு உருவாகிறதா?

இலங்கையில் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள், சமாந்தரமான ஒரு அரசு உருவாக்கப்படும் ஆபத்தைக் கொண்டிருப்பதாக, கடந்தவாரம் ஒரு அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார், ஐ.நாவின் முன்னாள் விசேட நிபுணரான யஸ்மின் சூகா தென் ஆபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் என்ற, அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராக உள்ள, ; யஸ்மின் சூகா ; வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அவர் இங்கு சமாந்தரமான அரசு என்று குறிப்பிட்டிருப்பது, ; ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு ...

Read More »

எனக்கு அரசியலுக்கு வருவதற்கு விருப்பமில்லை!- முத்தையா முரளிதரன்

தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலினை தங்களுக்கானதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கொழும்பு வேட்பாளர் விமல் வீரவன்சவுக்கு ஆதரவு தெரிவித்து முத்தையா முரளிதரனினால்  தமிழ் வர்த்தகர்களுக்கு இடையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்விலேயே முத்தையா முரளிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன மத பேதமின்றி அனைவருக்கும் சிறந்த சேவைகளை நாம் வழங்கி வருகின்றோம். மேலும் அரசியல்வாதிகள் மக்களுக்கு உதவுவார்கள் என ஒவ்வொரு காலமும் எதிர்பார்த்து ஏமாந்து ...

Read More »

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா?

கொரோனாவால் குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிட்ட மாதங்களுக்குள் இழந்து மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது. 60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் ...

Read More »

பொறுப்புக்கூறல் விவகாரத்தில் கடுமையான அணுகுமுறைகளை பிரயோகிக்க வேண்டும்

இலங்கையில் அண்மைக்காலமாக சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாடுகளுக்கான இடைவெளி மிக விரைவாகச் சுருங்கி வருவதாகவும் செயற்பாட்டாளர்கள் இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்ற 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இலங்கையில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கண்காணிக்க வேண்டும் என்றும் இலங்கையின் மீது இன்னமும் வலுவான அணுகுமுறைகள் பிரயோகிக்கப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும், கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றிய ஐ.நா ...

Read More »

கொரோனா சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது

கொரோனா வைரஸ்; சமூகத்;துக்குள் பரவும் ஆபத்துள்ளதை நிராகரிக்க முடியாது என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். கந்தக்காட்டிலிருந்து வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இந்த வாரம் மிகமுக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கந்தக்காடு கொரேனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள அதேவேளை கொரோனா வைரஸ் நோயளிகளுடன் தொடர்பிலிருந்த சிலர் சமூகத்துக்குள் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். முகக்கவசங்களை அணிவது,கைகளை கழுவுவது,சமூக விலக்கல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More »

விஜய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் – அக்‌ஷரா கவுடா

விஜய் படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததற்காக தற்போதும் வருந்துவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார். உயர்திரு 420 படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா. அதன் பிறகு விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் அதர்வாவின் இரும்புக் குதிரை, ஜெயம் ரவியின் போகன், ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ திற, சந்தீப் கிஷானின் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் துப்பாக்கி படத்தில் நடித்ததற்காக தான் வருத்தப்படுவதாக அக்‌ஷரா சமீபத்திய ...

Read More »

ஆணைக்குழு மீதும் ராஜபக்ஷக்கள் அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள்

பிரசார கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விதிமுறைகள் விதித்த போது அவர் மீதும் ஆணைக்குழு மீதும் ராஜபக்ஷக்கள் அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். மக்கள் மத்தியில் கொரோனா கட்டுப்படுத்தலில் வெற்றி பெற்றுள்ளதாக இவர்கள் முன்னெடுத்த பிரசாரங்களின் காரணமாகவே நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ராஜபக்ஷக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே கொரோனா பற்றி மக்கள் மத்தியில் ...

Read More »

விமல் உடன் இணைந்த முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் , கொழும்பில் பொதுஜன முன்னணி வேட்பாளர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில், இலங்கை சுதந்திர மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன், குறித்த வா்த்தர்களை சந்தித்த ...

Read More »