போக்கிரிகளை தண்டிக்க வேண்டும் என்று நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருக்கிறார்.
கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய ஒருவரின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகர் பிரசன்னா தனது சமூக வலைதளத்தில், எவரும் எவருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேனென்று கொச்சைப்படுத்துவது பெரிதாய் பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரையேன் கேட்பதில்லை இவரையேன் கேட்பதில்லை என்கிற வாதமும் பயன் தராது. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவர்க்கெதிராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்!
மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம் என்று தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னாவின் இந்த கருத்துக்கு பெரும்பாலும் ஆதரவான கமெண்ட்டுக்களும் சில எதிர்ப்பு கருத்துக்களும் பதிவாகி வருகின்றன.