இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் , கொழும்பில் பொதுஜன முன்னணி வேட்பாளர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், இலங்கை சுதந்திர மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அத்துடன், குறித்த வா்த்தர்களை சந்தித்த அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் வா்த்தர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் வழங்கியுள்ளார் அத்தோடு, குறித்த பிரச்சினை களை அரசிடம் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர் கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், புறக்கோட்டை புடவை கடை வர்த்தக உரிமை யாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பி. தியாகராஜா பிள்ளை, தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தன ராஜா சரவணம், இலங்கை வன்பொருள் வர்த்தக சங்கத்தின் தலைவர், எஸ். அருலானந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
Eelamurasu Australia Online News Portal