குமரன்

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த இளம் பாடகி

ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்ட இளம் பாடகி அவரை இசையால் ஈர்த்துள்ளார். வளர்ந்து வரும் தமிழ் பின்னணி பாடகி தர்ஷனா கே.டி., இவர் ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டார். அழகிய தமிழ் மகன் படத்தில்  “மதுரைக்கு போகாதடி” பாடலின் மூலம் அறிமுகமான இவர், ஓகே கண்மணியில் “காரா ஆட்டக்காரா”, “தீர உலா”, காஞ்சனா 2 வில் “கருப்பு பேரழகா”, ஓகே கண்மணி ஆந்திர மொழியில் “மெண்டல் மனதில்” மற்றும் இந்தியில் பல  பாடல்களை பாடியுள்ளார். தற்போது இவர் ஏ.ஆர்.ரகுமான் ...

Read More »

உரிமைக்காக உழைக்ககூடியவர்களை தெரிவு செய்க!

பொதுமக்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக உரிமைக்காக உழைக்ககூடியவர்களையும் சரியான கொள்கை நிலைப்பாட்டில் உள்ளவர்களையும் நேர்மையின் வழி நின்று மக்களுக்கு பொறுப்புகட்கூறுபவர்களையும் தெரிவுசெய்ய தவறாது எமது வாக்குரிமையையும் விருப்புவாக்குகளையும் பயன்படுத்துவோம் என தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. எமது அடிப்படை அரசியல் அபிலாசைகளான தாயகம் தேசியம் சுயநிர்ணயம் போன்றவற்றை தொடர்ச்சியாக நிராகரித்து நிற்கும் பேரினவாதகட்சிகளையும் அவற்றை தேர்தல் காலங்களில் உச்சரிக்கும் கட்சிகளையும் அவற்றால் இறக்கப்பட்டுள்ள குழுக்களையும் நிராகரிப்போம் எனவும் தமிழ்மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. எமது வாக்குகளை தற்காலிக சலுகைகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும் விற்பதை தவிர்ப்போம் என ...

Read More »

இறந்தபிறகும் 8 பேருக்கு வாழ்க்கை கொடுத்த கேரள வாலிபர்

மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த கேரள வாலிபர் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித், தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு, ஐடிஐ மாணவனாக இருந்தபோது ரயில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதைப் பார்த்த அவர், கையிலிருந்த சிகப்பு பையை தூக்கிப் பிடித்தபடி அரைமணி நேரம் ஓடியிருக்கிறார். ஆபத்தைப் புரிந்து கொண்டு ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது. டிரைவராக பணிபுரிந்துவந்த அனுஜித். ...

Read More »

பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமாம்

தேர்தலில் வெற்றிபெற்றால் கிழக்கு மாகாண  அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதியளித்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.<br /> தற்போது சிறையில் உள்ள பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுகின்றார். பிள்ளையான் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வாக்குறுதியளித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானால் மாத்திரமே அமைச்சர் பதவியை வழங்கமுடியும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்தேசிய கூட்டமைப்பின்  முன்னாள் ...

Read More »

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கே எங்கள் ஆணையை வழங்குவோம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நிகழ்ந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னும் நம் விட்ட இடத்திலேயே நிற்கின்றோம் என்று கூடக் கூற முடியாத அவலம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பல தேர்தல்களைக் கடந்து வந்திருந்தாலும், அத்தேர்தல்களில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியாக எம் மக்களின் நலன் சார்ந்து செயல்பட்டார்களா? பதிலானது இல்லை என்றுதான் கூற வல்ல தகமைகளை அவர்கள் கொண்டுள்ளனர். ஆயுதப் போராட்டத்தினால் முன்னகர்த்தப்பட்டு சர்வதேச மயப்படுத்தப்பட்ட சுயநிர்ண உரிமையுடன் கூடிய சுயாட்சி வரைபை விட்ட இடத்தில் இருந்து தொடர்வதை விடுத்து, பல சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக ...

Read More »

எமக்கு புலம்பெயர் உறவுகளிடம் இருக்கும் செல்வாக்கைக் குறைக்க சதி

புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பவுள்ளனர் என நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வெற்றியை ஏதோ ஒரு விதத்தில் தடுப்பதற்கு அரச முகவர்களும், எமக்குப் போட்டியாக உள்ள ஏனைய ...

Read More »

பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் – பிரசன்னா நெகிழ்ச்சி

எதிலும் பின்வாங்காத போராளியாக என்னை மாற்றியது ‘தல’ அஜித் தான் என நடிகர் பிரசன்னா நெகிழச்சியுடன் பதிவிட்டுள்ளார். நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ...

Read More »

‘ராஜபக்ஷக்களின் ஒட்டுமொத்த குடும்பமுமே மாபியா’

ராஜபக்ஷாக்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஹெரோயின் படை, எதனோல் மாஃபியா படை, மணல் கொள்கை உள்ளடங்கலான பல்வேறு செயற்பாடுகளினால் சூழலை மாசுபடுத்தும் படை, பாதாள உலகக்குழுக்கள் ஆகிய நாற்படைகளை மையப்படுத்தியே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் ஆற்றிய உரையின் காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் சம்பிக்க ரணவக்க பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த நாட்டை நன்கு கற்ற, அறிவுடையவர்களே நிர்வகிக்கப்போகின்றார்கள் என்பதுதான் மக்களுக்கு வழங்கப்பட்ட மிகநீண்ட ...

Read More »

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் மர்ம விதைகள்

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் உயிரை இழந்துள்ளனர். இன்னும் இந்த நோயின் தாக்கம் ஒரு சில நாடுகளில் தீவிரமாகி தான் வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கு பரவியது.ஆனால், சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு ...

Read More »

சுமந்திரன் இராணுவஆட்சியொன்றை நடத்துகின்றார்

சுமந்திரன் இராணுவஆட்சியொன்றை நடத்துகின்றார் என வேட்பாளா எம்.கே சிவாஜிலிங்கம் திருகோணமலையில் கருத்து வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சார சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சுமந்திரனுடன் 20 விசேட அதிரடிப்படையினருடன் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இராணுவஆட்சிஎனசொல்லக்கூடியளவிற்கு சுமந்திரனின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள சிவாஜிலிங்கம் இவ்வாறான நிலையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் இராணுவ ஆட்சியை எதிர்ப்பது வேடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தினை நடத்தமுடியாத பலவீனமான நிலையிலுள்ளது எனவும் அவர் ...

Read More »