குமரன்

ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும்

ஏழு தமிழர்கள் விடுதலை தாமதமாவதற்கு யார் காரணம் என்பது தமிழ ஆளுநருக்கு தெரியும் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களின் விடுதலை தாமதமடைவது ஏன் என கேள்வி வைரமுத்து தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். எழுவர் விடுதலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கருணை காட்டுகின்றது தமிழக அமைச்சரவை முன்னரே தீர்மானம் நிறைவேற்றிவிட்டது எங்களுக்கு மறுப்பில்லை என காங்கிரஸ் கட்சியும் பெருந்தன்மை காட்டுகின்றது/இந்நிலையில் இந்த விடுதலைக்கு தடையார் என்பது ஆளுநருக்கே தெரியும் ...

Read More »

மீண்டும் நியூசிலாந்தின் பிரதமரானார் ஜெசிந்தா!

நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டென்(Jacinda Ardern ) 2ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். ஒக்டோபர் 17ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற ஜெசிந்தா ஆர்டனின் தொழிலாளர் கட்சி, மொத்தம் உள்ள 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து வெலிங்டனில் இன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2ஆவது முறையாக ஜெசிந்தா ஆர்டென் பதவியேற்றுக்கொண்டார்.

Read More »

துல்லியமான தரவின்றி கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவது கடினம்

பி.சி.ஆர் சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் வெளியிடுவதற்கான ஒரு பொறிமுறையை அரசாங்கம் வகுக்கும் வரை நாட்டில் கொவிட்-19 பரவலை எதிர்த்து சரியான தரவுகளை இணைப்பது கடினம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது. இந்த முடிவுகளை வெளியிட இப்போது எடுக்கப்படும் 48 மணி நேர காலத்தை நம்ப முடியாது என அவர்கள் தெரிவித்தனர். சரியான தரவு வெளியிடப்படும் வரை வைரஸை திறம்பட கட்டுப்படுத்துவதை எதிர்பார்க்க முடியாது என மருத்துவர் செனால் பெர்னாண்டோ கூறினார். சீரற்ற(Random) பி.சி.ஆர் சோதனைகள் சிவப்பு வலயப் பகுதிகளில் ...

Read More »

‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக?

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார். சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலைவர்கள் இப்போது ...

Read More »

யாழ்.கரவெட்டியில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா

யாழ். கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 248 பேருக்கு பிசிஆர் பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. இதில் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் ...

Read More »

கட்சி குறித்து விஜய் பரபரப்பு அறிக்கை

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பது குறித்து நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் ...

Read More »

கட்சியாக மாறுகிறது விஜய்யின் மக்கள் இயக்கம்

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும். மேலும், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் குறிப்பிட்ட கருத்துகளை வைத்து விவாதங்கள் உருவாகும். ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு நடந்த இசை வெளியீட்டு விழாவில் விட அரசியல் ரீதியான விஷயங்களைத் தவிர்த்தார் விஜய். இதனால், அரசியல் விஷயங்களில் விஜய் ...

Read More »

அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை முன்னரே கணித்த பெர்னி சாண்டர்ஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்றும், அம்முடிவுகளுக்கு ட்ரம்ப் எவ்வாறு நடந்து கொள்வார் என்றும் முன்னரே கணித்த ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட செனட்டர் பெர்னி சாண்டர்ஸின் நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மீண்டும் காடுகளில் விடப்படும் கோலா கரடிகள்!

அவுஸ்திரேலியாவில், காட்டுத் தீயினால்  படுகாயமடைந்த கோலா கரடிகள், சிகிச்சைக்குப் பின்னர், மீண்டும் காடுகளில் விடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கங்காரு தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 5,20,000 ஏக்கர் காடுகள் எரிந்து சாம்பலான நிலையில், கடுமையான தீ காயங்களுடன் 100 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் மீட்கப்பட்டன.   காயங்களுக்கு மருந்திட்டு, சத்தான உணவு வகைகளை வழங்கி கரடிகளை பராமரிக்கும் விலங்கு நல ஆர்வலர்கள், காயங்கள் குணமடைந்ததும், மீண்டும் அவைகளை வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர். கங்காரூ தீவில், கடந்த ஆண்டு 50,000 கோலா கரடிகள் இருந்த நிலையில், ...

Read More »

பேலியகொட மீன் சந்தைக் கொத்தணிப் பரவலுக்குக் காரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கக் காரணமாக இருந்த பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்கின்றது எனச் சுகாதார அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   மினுவாங்கொடை கொரோனா கொத்தணி கடந்த மாதம் 3ஆம் திகதி பரவ ஆரம்பித்தது.எனினும், அதனை மிஞ்சிய பேலியகொட மீன்சந்தைக் கொத்தணி கடந்த மாதம் 21ஆம் திகதி பரவ ஆரம்பித்து பாரியளவில் வியாபித்துள்ளது.

Read More »