முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் படங்கள் வெளியாகும்போது, அதிலுள்ள அரசியல் ரீதியான கருத்துகளை வைத்து விவாதம் நடைபெறும். மேலும், இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சில் குறிப்பிட்ட கருத்துகளை வைத்து விவாதங்கள் உருவாகும்.
‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அதற்குப் பிறகு நடந்த இசை வெளியீட்டு விழாவில் விட அரசியல் ரீதியான விஷயங்களைத் தவிர்த்தார் விஜய்.
இதனால், அரசியல் விஷயங்களில் விஜய் பின்வாங்குவதாகத் தகவல் வெளியாகி வந்தது. சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், விஜய் மக்கள் இயக்கம் அரசியல் காட்சியாக மாறும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.