நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட ...
Read More »குமரன்
எதிர்பார்த்ததற்கு முன்னரே இலக்கை அடைந்த விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 190 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 103 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும். விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 70 சதவீதமாகும். எதிர்பார்த்ததை விட இந்த இலக்கு முன்னதாகவே எட்டப்படுகிறது. இருந்தாலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவுத் தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது என்று Jobs Minister Martin Pakula கூறினார்..
Read More »ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்
தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் இந்த பஸ்தூன் தலிபான்களோடு எப்படி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் சுய நலனோடு பல ...
Read More »அஜித், விஜய் படங்களுக்கு இணையாக வரவேற்பை பெற்ற ஜோதிகா படம்
ஜோதிகா நடித்த ‘ராட்சசி’ படத்தை ‘மேடம் கீதாராணி’ என்கிற பெயரில் இந்தியில் டப்பிங் செய்து கடந்தாண்டு யூடியூபில் வெளியிட்டிருந்தனர். நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசி’. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை, அறிமுக இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் கீதா ராணி என்கிற துணிச்சலான தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருந்த நடிகை ஜோதிகாவுக்கு பாராட்டுக்களும் குவிந்தன. ...
Read More »நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல்
நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் ஒருவர் அந்நாட்டு காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த நபர், அங்குள்ள பிரபல சுப்பர் மார்கெட் ஒன்றுக்குள் நுழைந்து கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என, அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். குறித்த இலங்கையர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.
Read More »வடக்கில் நேற்று 126 பேருக்கு கொவிட் தொற்று
புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 2, 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 65 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 438 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி, புதுக்குடியிருப்பு மருத்துவ அதிகாரி பிரிவில் 65 பேர், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 4 பேர், மல்லாவி ஆதார மருத்துவ மனையில் 3 பேர், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் ஒருவர் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 பேர் தொற்றாளர்களாக ...
Read More »அவசரகால சட்டம் மக்களின் குரல் வளையை நசுக்குகின்ற ஒரு சட்டமாக அமைந்துள்ளது
அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (3) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ள அதே நேரத்தில் அவசரகாலச் ...
Read More »தொற்றுள்ளவர் எண்ணிக்கையில் NSW மீண்டும் உச்சம்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,431 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் 12 பேர் மரணமடைந்துள்ளனர். வரும் நாட்களில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என Premier Berejiklian எச்சரித்தார். தொற்று கண்ட 979 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்கள். 63 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கும் என மாநில சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.
Read More »இழப்பிலிருந்து மீள்தல்
கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள். இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. தொற்று இலங்கையில் பரவத்தொடங்கியது முதல் இதுவரை ஏறத்தாழ நான்கு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் நோய்த்தொற்றாளர்களாக அடையாங்காணப்பட்டுள்ளதுடன், இந்த பெருந்தொற்று இலங்கையில் மட்டும் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமான மனித உயிர்களை பலியெடுத்துள்ளது. “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” என்ற வள்ளுவன் வாக்கினை அன்றாட வாழ்வில் தினம் தினம் கண்ணூடாகக் காணும் நிலையை கொவிட்-19 ...
Read More »ஆப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை சீனா கைப்பற்ற முயற்சி: நிக்கி ஹாலி
சீனா, ஆப்கானிஸ்தானில் ஒரு நகர்வுக்கு முயற்சிக்கிறது. பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக சீனா பலம் பெற முயற்சிக்கிறது. ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித்தவர் நிக்கி ஹாலி. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கேபினட் மந்திரி அந்தஸ்தைப்பெற்ற முதல் இந்திய வம்சாவளி என்ற சிறப்பைப் பெற்ற தலை சிறந்த நிர்வாகி. ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15-ந் தேதி தலீபான்கள் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருப்பதையொட்டி இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிஷனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் ...
Read More »