குமரன்

விரலுக்கேற்ற வீக்கமாக இருக்க வேண்டும்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும் அதனூடாகத் தமது செயற்பாடுகளின் உறுதிமொழிகளும், தாராளமாகவே அள்ளிவீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் தேர்தலொன்று, சுகாதாரப் பாதுகாப்பு முறைகளுக்கு மத்தியிலும் தொற்று நோயொன்றின் அச்சுறுத்தலுக்கு இடையிலும், முதன்முதலாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழுவானது, இந்தத் தேர்தலை நடத்திவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டி நிற்கின்றது. தேர்தலுக்கான ஒத்திகையிலேயே நீண்ட நாள்களைச் செலவிட வேண்டிய தேவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் இந்தத் தேர்தலுக்கான முனைப்பு காணப்படுகின்றதா என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது. வடபுலத்தை நோக்குகையில், நீண்டகால அரசியல் ...

Read More »

சுதந்திரபுரத்தில் அகழ்வு பணி முன்னெடுப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியொன்றில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டதை அடுத்து, நாளை (07) நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று (04) கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, நிலத்துக்கடியில், மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

Read More »

சிறிலங்காவி்ல் வாக்களிப்பு நேரம் நீட்டிப்பு

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதென, தேர்தல் ஆணைக்குழு வெ ளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வழமையாக காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணியுடன் வாக்களிப்பு நேரம் நிறைவடையும் நிலையில், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த நேரமானது 1 மணித்தியாலமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாக்களிப்பு நேரத்தை நீட்டிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதென்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

போதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை

பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர். ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து ...

Read More »

யாருக்கு வாக்களிப்பது?

தனிமனித ஒழுக்கம், நேர்மை, லஞ்சத்துக்கும் சலுகைகளுக்கும் விலைபோகாத தைரியம், தமிழ் மக்களின் அடிப்படை நிலைப்பாடுகளை தெளிவாக வலியுறுத்துவதோடு அதை முன்னின்று செய்யும் தற்றுணிவு கொண்ட, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்காக கொள்கைப்பற்றுடன் செயற்படக் கூடிய அரசியல் பிரதிநிதிகளையே இம்முறை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பல ...

Read More »

தப்புக் கணக்கு

ஐந்தும் ஐந்தும் எத்தனை என்றால், பத்து (10) தான் பதில், ஆனால், ஐம்பத்தைந்து (55) என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ச. நாட்டில் உள்ள தேசியவாத முகாமை முற்றிலுமாக அழித்து, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பிளவுக்கு வழி செய்யும் நோக்கத்துடனேயே வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் தலையீடு செய்தன என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருக்கும் கருத்து, ஐந்தும் ஐந்தும் 55 என்று பதில் கூறுவதற்குச் சமமானது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை வெற்றி பெறும் என்று சர்வதேச சக்திகள் எதிர்பார்க்கவில்லை என்றும், ...

Read More »

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார். அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. ...

Read More »

புலம்பெயர் தமிழ் மக்களை நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்…….

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே! எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கள நிரவரங்களைத் தெளிவுபடுத்தி, எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க விரும்புகின்றோம். கடந்த ஏழு தசாப்பதங்களாக இலங்கைத்தீவில் இன அழிப்புக்கு முகம்கொடுத்துவரும் எமது மக்கள் அந்த அழிவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியாகப் போராடிவருகின்றார்கள். குறிப்பாக கடந்த 2009 வரையான மூன்று தசாப்பதங்களாக அதி உச்ச அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்துள்ளதன் மூலம் எமது உரிமைப் போராட்டம் சர்வதேச கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. இந்நிலையில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளானது, தமிழ்த் ...

Read More »

தேவாலயங்களிற்கு வெடிகுண்டு மிரட்டல் இல்லை

வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வவுனியா தலைமை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா றம்பைக்குளத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயம் மற்றும் முக்கிய தேவாலயங்களில் இன்றையதினம் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், நகரின் முக்கிய பகுதிகள், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் காவல் துறை மற்றும் இராணுவத்தினர் மோப்பநாய்கள் சகிதம் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். மன்னார் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றிற்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக சுமார் 8 லட்சம் மக்களே இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர். பெருந்தொற்று சூழலினால், உணவு உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உணவு வங்கியின் தலைமை நிர்வாகி Brianna Casey. வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக விசா கொண்டிருப்பவர்கள், ...

Read More »