பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர்.
ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலாவுக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், உள்ளிட்ட பலர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal