இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் ; அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்பதுடன் அந்தச் ...
Read More »குமரன்
சோகத்தில் இருந்து மீட்க அதுதான் காரணம் – ஸ்ருதிஹாசன்
கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தன்னுடைய சோகத்தில் இருந்து மீட்க எது காரணம் என்பதை கூறியுள்ளார். கமல்ஹாசனின் வாரிசாக அறிமுகமானாலும் தனக்கான அடையாளத்தை அழுத்தமாக பதித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘எழுத்து என்பது எப்போதுமே எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. நான் பாடல்கள் எழுதுகிறேன், கவிதைகள் எழுதுகிறேன், சோகமான தருணங்களில் அவை நம்மை நாம் சிறப்பான முறையில் வெளிப்படுத்த உதவுகின்றன என்று நான் நம்புகிறேன். நான் எழுதும் கவிதைகளுக்கும், கதைகளுக்கும் திரை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். ...
Read More »பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா… சீன தடுப்பூசி போட்ட 2 நாளில் பாதிப்பு
பாகிஸ்தானில் தற்போது சீனா வழங்கிய சினோபாம் தடுப்பு மருந்து மட்டுமே பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு உதவும் வகையில் சீனா அரசு 5 லட்சம் டோஸ்கள் சினோபாம் மருந்தை இலவசமாக வழங்கி உள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் தடுப்பூசி (முதல் தவணை) போட்டுக்கொண்டார். இந்நிலையில், இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் ...
Read More »மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது முற்றும் முழுதாக இந்தியாவை பொறுத்தவிடயம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் இந்தியா இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது என தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையின் அமர்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தியா தமிழ் மக்களின் அரசியல் ...
Read More »பல்கலை மாணவர் இருவர் உட்பட 9 பேருக்கு நேற்று தொற்று உறுதி
வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மானிப்பாயைச் சேர்ந்த தாய், மகள் உட்பட யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப் பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று 304 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ...
Read More »ஆஸ்திரேலியா பப்பு நியூ கினியா: அகதிகளுக்கு கொரோனா தொற்று
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் கடல் கடந்த தடுப்பு தீவாக செயல்படும் பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 6 அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வர வேண்டும் என அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்றைய நிலையில், அத்தீவில் சுமார் 90 அகதிகளும் 40 தஞ்சக்கோரிக்கையாளர்களும் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது கொரோனா தொற்றினால் அகதி ஒருவர், வயிற்று வலிக்கான மருத்துவ சிகிச்சைக்கு ...
Read More »நிதர்சனம் பரதன் மாரடைப்பால் லண்டனில் காலமானார்!
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் நேற்று மார்ச் 18இல் காலமானார். போராட்டம் சம்பந்தமான செய்திகளையும் தகவல்களையும் மக்களிடம் உடனுக்குடன் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அதன் ஆரம்பகர்த்தாவாக கேணல் கிட்டுவின் வழிநடாத்தலில் பெரும் பங்காற்றியவர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படப் பிரிவு, ஆவணப் பிரிவு, குறும்படம், விடுதலைப் பாடல் ஒலிப்பதிவு, ஒலிநாடா வெளியீடு, புலிகளின் ...
Read More »‘தளபதி 66’ படத்தின் மாஸான
நடிகர் விஜய்யின் ‘தளபதி 66’ படத்தை இயக்கப்போவதும், தயாரிக்கப்போவதும் யார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், தளபதி 66 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. ...
Read More »விரோதக் கொள்கையை கைவிடும்வரை அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை
அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க முடியாது என்றும் வட கொரியாவின் முதல் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சோன் ஹுய் தெரிவித்துள்ளார். கொரிய மத்திய செய்தி நிறுவனத்தினால் இன்று (வியாழக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வடகொரியாவுடன் தொடர்பை வலுப்படுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கன் சில இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், இதுகுறித்து வட கொரியாவின் முதல் ...
Read More »புதினை கொலையாளி என ஜோ பைடன் விமர்சனம்
வாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ரஷிய அதிபர் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. அந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி வேட்பாளராக அப்போதைய அதிபர் டிரம்புக்கு ஆதரவாகவும், ஜோ பைடனை தோற்கடிக்கவும் ரஷிய அதிபர் புதின் முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஜோ பைடன் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal