கமல் ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், தன்னுடைய சோகத்தில் இருந்து மீட்க எது காரணம் என்பதை கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் வாரிசாக அறிமுகமானாலும் தனக்கான அடையாளத்தை அழுத்தமாக பதித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘எழுத்து என்பது எப்போதுமே எனக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
நான் பாடல்கள் எழுதுகிறேன், கவிதைகள் எழுதுகிறேன், சோகமான தருணங்களில் அவை நம்மை நாம் சிறப்பான முறையில் வெளிப்படுத்த உதவுகின்றன என்று நான் நம்புகிறேன். நான் எழுதும் கவிதைகளுக்கும், கதைகளுக்கும் திரை வடிவம் கொடுக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
கடும் வேலைப்பளுவுக்கு இடையே எழுத்து மட்டுமே எனக்கு அவற்றிலிருந்து விடுபட ஒரு நிவாரணியாக இருக்கிறது. பாடல்கள் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். பல ஆண்டுகளாக நான் என் திறன்களைத் தொடர்ந்து கூர்தீட்டி வருகிறேன்”. இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal