முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டதாக பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இறுதி வரை அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்களை வழிப்படுத்தியும் செயற்பட்டவர் காக்காவேயென முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ஏற்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற பகிரங்கப்படுத்தப்படாத கூட்டங்களில் மாணவர்களையும் வடமாகாணசபையினையும் காக்கா அண்ணரே தொடர்புபடுத்தியதாக தெரிவித்த அவர் முதலமைச்சர் காக்காவையும் கூட்டங்களிற்க அழைத்துவர வலியுறுத்தியதை மூத்த ஊடகவியலாளர் ...
Read More »குமரன்
சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு, 13,314 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறி தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதேவேளை, சில மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், மலையகத்தில் ...
Read More »அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள்!
அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என் முன்னாள் வௌியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ...
Read More »சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்யும் சீனா!
சீன ஆராய்ச்சியாளர்கள் சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்யும் வகையில் செயற்கை கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்று அதிகாலை புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் சந்திரனின் இருண்ட பக்கத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ராக்கெட்டிலிருந்து செலுத்தப்பட்ட 25 நிமிடத்தில் செயற்கை கோள் பூமி-சந்திரன் வட்டப்பாதையை சென்றடைந்தது. அதன் பின் தகவல் தொழில்நுட்பம் செயல்பட தொடங்கியது. குயூகியா என்ற இந்த செயற்கை ...
Read More »செல்பி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி!
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பகுதியின் ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ...
Read More »ரஜினியின் 2.0 படத்தின் கதை!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் – ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், இந்தி நடிகர் அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ஷங்கருக்கு திருப்தி இல்லை ...
Read More »‘ஹலோ.. சொல்லுங்க’ !-கூகுள்
கூகுள் அசிஸ்டெண்ட் செயலி கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டது. ஆனால் கூகுள் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இந்த செயலி பிரபல அடையவில்லை. ஏனெனில் இந்த செயலியை பயன்படுத்தும் போதெல்லாம் ஒகே கூகுள் மற்றும் ஹே கூகுள் என்ற வார்த்தைகளை கூற வேண்டும். இதுபோன்ற சில காரணங்களால் கூகுள் அசிஸ்டெண்ட் செயலிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லாமல் போனது. அதன் பயன்பாட்டாளர்களும் குறைந்து கொண்டே வந்தனர். இந்நிலையில் கூகுள் ...
Read More »அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் 2000 அகதிகள்!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முயற்சியில் ஈடுபட்ட சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருவில் உள்ள தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் படகு வழியாக நுழைந்த இந்த அகதிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்புக் காலம் எந்தவித வரையறைமின்றி வைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் பற்றி வரும் ஜுலை மாதம் நடக்கவிருக்கும் தொழிலாளர் கட்சியின் தேசிய மாநாட்டில் ...
Read More »முன்னாள் போராளி சாவினைத் தழுவியுள்ளார்!
உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார். ’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி மோதலின் போது தனது முள்ளந்தண்டுப் பகுதியில் படுகாயமடைந்தார். அதன்பின்னர் இன்றுவரை இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் தனது வாழ்கையை பெரும் சவால்களுக்கு மத்தியில் கழித்து வந்த நிலையில் கடந்த ...
Read More »வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டை!
வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டைஇன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்கோப்பாய் வடக்கு இலகடி என்ற பகுதியில் இந்த கைத்தொழில் பேட்டை, தாயக நேரப்படி இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த கைத்தொழில் பேட்டையில் 30 பேர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதுடன்,மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. நவீனஇயந்திரங்களுடன் கூடிய இந்த கைத் தொழில் பேட்டையில் சித்திரம், தையல், புடைப்புச் சித்திரம்,கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குஉரையாற்றிய ஐ.பி.சி தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன், இன்னும் போர் ஒயவில்லைஎனவும் தொழிலுக்கான போர் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறினார். ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			